யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

Published By: Vishnu

26 Sep, 2023 | 05:30 PM
image

மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே மானிட இனத்தின் அசைவும். இயக்கமும் இனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக இடம்பெற்றது. தேவைகள் வரையறையற்றவை, வளர்ந்து செல்பவை. இத்தகைய தேவைகளினை பூர்த்தி செய்வதற்கு பயணங்கள் தேவைப்படுகின்றது. அத்தகைய பயணங்களின் வடிவங்களும், முறைகளும் கால மாற்றம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் போன்றவற்றல் வேறுபாடு கின்றன. இத்தகைய நகர்வுகள், பயணங்கள், சமகாலத்தில் நாம் வியந்து நோக்குகின்ற "சுற்றுலா என்கின்ற முக்கியத்துவம்வாயந்த பாரிய தொழில்துறையின் உருவாக்கத்திற்கு அடிப்படையானது சுற்றுலா என்கின்ற பதம் பதினோராம் நூற்றாண்டுகளிலே அதிகம் புழக்கத்திலிருந்த டொனர்ஸ் (Tornus) என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. "டூர்" (Tour) என்ற ஆங்கிலச் சொல்லின் கருத்து யாதெனில் ஓர் வட்டத்தின் சுழற்சியினைக் குறிப்பதாக அமைந்துள்ளது. நவீன சுற்றுலாவின் வரலாறு 17மீ நூற்றாண்டில் இருந்து நோக்கப்படுகின்றது, இக்காலப்பகுதியில் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பியாவில் வாழ்ந்த இளம் பிரபுக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குறிப்பாக பிரான்ஸ், கிறீஸ், இத்தாலி மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு கலை மற்றும் கலாசாரம், பாரம்பரியம், மரபுரிமை போன்றவற்றினை அறிதலின் நோக்கமாகக் கொண்டு பயணங்களினை மேற்கொண்டனர்.

அடிப்படையில் நீண்ட பயணங்களின் தோற்றமானது அத்மா ஈடேதத்துக்கன சமய அனுஷ்டானங்களிலும், வருமான ஈட்டலுக்கன வணிகத்தில் ஈடுபடும் நோக்கிலும் அமைந்தன. இவ்வாறு மானிட இனம் சமுக பொருளதர ஈடேற்றத்துக்கு என பயணங்களினை மேற்கொண்டனர் என்பதற்கு வரலாற்று ரீதியாக சான்றுகள் பல உள்ளன. அதிலும் தமிழர்கள் சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே கடல்வழிப் பயணங்களில் ஈடுபட்டனர் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. 'பண்டைக்கால வர்த்தகத்தின் சுருக்கமான வரலாறு" எனும் நூலில் பண்டைக்கால வணிகத்தின் வரலாறு பற்றிக் குறிப்பிடும் போது கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்திய இராச்சியமானது பாலஸ்தீனம். நுபியா போன்ற நாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்ததும், கி.பி 608" ஆண்டளவில் எகிப்தியரும் பீனிசியர்களும் கடல் வழியாக கூட்டாக ஆபிரிக்கா, அரேபியா. இந்தியா, ஸ்பெயின் போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை மேற்கொண்டிருந்தனர் என்பது புலப்படுத்தப்படுகின்றது. சிறப்பாக சங்ககால இலக்கியங்களிலும், சங்ககாலத்துக்கு முற்பட்டதக கருதப்படும் தொல்காப்பியத்திலும் இவை குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக “முந்திர வழக்கம்” என்று கூறப்படுவதிலிருந்து தொல்காப்பியம் எனும் தமிழ் இலக்கண நூல் இயற்றப்படுவதற்கு முன்னே தமிழர்கள் கடல் கடந்து வாணிப நோக்கத்திற்காக பயணங்கள் மேற்கொண்டார்கள் என்பது வெளிப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு வாணிபத்திற்கான பயணமும் ஆதம ஈடேற்றத்திற்கான பயணமும் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனால் 18" நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் விளைவாய் ஓர் செல்வந்த வகுப்பு ஐரோப்பிய நாடுகளில் உருவாகியது. அவர்கள் தமது ஓய்வு நேரத்தினை மகிழ்வுக்காய் பயன்படுத்திக் கொள்வதற்கு 'பொழுதுபோக்கு சுற்றுலா" எனும் எண்ணக்கருவினை நடைமுறைக்கு அறிமுகப்படுத்தினர். இவ்வாறாய் இவ் அறிமுகத்தின் பயனக உலகில் ஏனைய நாடுகளும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டன. பணம் படைத்த வர்க்கத்தினர் தமது ஓய்வு நேரத்தினை பயணங்களில் செலவு செய்தனர். இதன் விளைவாக என்னவோ 19ம் நூற்றாண்டில் தோமஸ் குக் மற்றும் புதல்வர் (Thomas Cook & Son} என்ற முதல் பயண முகவர் நிறுவனம் தோற்றம் பெற்றது. இதன் பேறாய் சுற்றுலாத்துறையானது பல்பரிமாணம் கொண்டு உலகமெங்கும் வளர்ச்சியடையத் தொடங்கியது. இராண்டம் உலக மகா யுத்தத்தின் பின் மத்திய தரைக் கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கிடையே பிரபல்யம் அடைந்தது. இக்காலத்தில் சமூக நலன் மீது ஏற்பட்ட அக்கறையும், ஊழியச் சட்டங்களில் ஏற்பட்ட மறுதல்களும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் பாரிய நேர்கணிய பங்களிப்பினை ஏற்படுத்தியது.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெகுசன சுற்றுலா பிரபல்யமடைந்தது. காலப்போக்கில் மானிட இனத்தின் வளர்ச்சியும், நாகரீக மாறுதல்களும் சுற்றுலாத்துறைக்கான கேள்வி வடிவங்களில் மாறுதல்களை ஏற்படுத்தின. இதன் விளைவாக மரபுரிமைச் சுற்றுலா. பாலியல் சுற்றுலா, விவசாயச் சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, சமய சுற்றுலா-புனித யாத்திரைகள், கல்விச் சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா, இளைஞர் சுற்றுலா. ஆரோக்கிய சுற்றுலா, வியாபாரச் சுற்றுலா, சாகசச் சுற்றுலா, கலாசாரச் சுற்றுலா என சுற்றுலானின் வடிவங்கள் மானிடத்தின் தேவைக்கேற்ப உருவகம் பெற்றது.

இலங்கையில் சுற்றுலாத்துறை

புத்த பகவான் பொதித்த போதனைகள், தத்துவங்கள் இலங்கையின் அநாதி குடிகளிடையே பரவுவதற்கு முன்னர், வெளிநாட்டவர்கள் இலங்கையுடன் பயணத் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்பதற்கு தபசு (Thapassu) மற்றும் பல்லுகர (Balluka) என்ற இரு சகோதரர்கள் இலங்கைக்கு வணிக நோக்குடன் பயணம் மேற்கொண்டதனை வரலாற்று ஆதாரங்கள் சான்றாக்குகின்றன. எனினும்ஓர் கட்டமைக்கப்பட்ட சுற்றுலா வளர்ச்சியானது காலனித்துவ ஆட்சிக்காலத்தில்லேயே உருவாக்கப்பட்டது.

குறிப்பாக, 450 வருட காலனித்துவத்தின் பாரம்பரியம்மும். இலங்கையின் எழில் கொஞ்சும் இயற்கை அழகும், காலனித்துவத்திற்கு முன்னரான கட்டடக் கலைகளின் மகிமையும், சிறப்பும் மேலும் வசீகரமான காலநிலையும் நடுத்தர வருமானம் உழைக்கும் ஐரோப்பியரகளை இலங்கை நோக்கி வரவழைத்தது. உண்மையில் இன்னும் அழுத்தமாகக் ஐரோப்பியர்களினால் இலங்கை குளிர்கால ஓய்வுக்கான ஓர் இடமாக நோக்கப்பட்டது. 1937மீ கூறுவதாயின் ஆண்டு பிரித்தானியருடைய ஆட்சிக் காலத்தில் "கற்றுவாப் பணியகம்" இலங்கையில் திறந்து

வைக்கப்பட்டது. ஆனால் இதன் செயற்பாடுகள் இரண்டாம் உலக யுத்தத்தினால் சொபையீழ்ந்து. செயலிழந்ததாகக் போயிற்று

1960ஆம் ஆண்டு வரையில் இலங்கை ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, தெங்கு, இறப்பர் போன்றவற்றில்தான் தங்கியிருந்தது ஆனால் 1960ம் ஆண்டிற்கு பின்னர் உலக சந்தையில் இவற்றுக்கான கேள்வி வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக அந்நிய செலாவணியை உழைப்பதற்கான ஓர் மாற்று வழியாக சுற்றுலாத்துறையானது நோக்கப்பட்டது. அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மற்றும் தனியார் துறையினரும் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி மீது அதீத அக்கறை செலுத்தினர், குறைந்த முதலீட்டில் கூடிய வருமானத்தினை உழைக்கக் கூடிய துறையாக சுற்றுலாத்துறை காணப்பட்டமையே காரணமாக அமைந்தது ஆனாலும் இத்துறையானது இன்றுவரை இங்கு தொடர்ச்சியான சவால்களினை எதிர்நோக்குகிறது.

குறிப்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுற்றுலாத் துறையினுடைய வளர்ச்சியானது நீண்ட காலமாக நடைபெற்ற தமிழர்களின் தாயக மீட்பு போராட்டத்தில் பாதிப்புக்குட்பட்டது. ஆனாலும் 2000ம் ஆண்டுகளின் முற்பகுதியில் கிழக்கில் அறுகம்பை பாசிக்குடா பளிங்கு கடற்கரை போன்றவை சுற்றுலாப் பயணிகளால் கொண்டாடப்படும் இடங்களாக வளர்ச்சி பெற்றது. 2009 ஆண்டு. என்றும் “தீராத் தாகத்துடன்” மௌனித்த யுத்தத்தின் பின்னரும் வடக்கில் சுற்றுலா வளர்ச்சியானது 2014ம் ஆண்டுவரை மிகவும் மந்தகதியிலேயே காணப்பட்டது. ஆனால் கடல்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று கடலை ஓய விடுவதில்லை என்பது போல் முதலீட்டாளர்களும், அரச இயந்திரமும் வடக்கில் சுற்றுலா அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணஓட்டத்தில் அன்றும். இன்றும் பயணித்தவாறா உள்ளன. இவற்றுக்கு அப்பால் புலம்பெயர் தேசத்தில் வாழும் புனர்பெயர் உறவுகள், புலம்பெயர் முதலீட்டாளர்கள் என்கின்ற போர்வையில் பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு சுற்றுலா அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நீண்ட வாதங்கள். பிரதிவாதங்கள், கலந்துரையாடல்கள் மேற்கொண்ட பொழுதும் விளைவு என்னவோ சுற்றுலா அபிவிருத்தி என்பது வடக்கில் ஓர் கானல்நிரோய்! உள்ளது, ஆரோக்கியமான பொதுமைப்படுத்திய அபிவிருத்தி மிக அரிதாகவே உள்ளது. சுற்றுலா என்பது 13 திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மத்திய அரசினாலும், மாகாண நிர்வாகத்தாலும் நிர்வகிக்கப்படுகின்ற துறையாக இருப்பதனால், மாகாண நிர்வாகமும் மத்திய நிர்வாகமும் இசைந்து இணைந்து செயல்படுவது சற்று கடினமாக உள்ளது. இவற்றுக்கு எல்லம் மகுடம் சூடுவது போல் தன்னார்வ நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு வடக்கில் சுற்றுலா அபிவிருத்திக்கான ஐந்து ஆண்டு திட்டங்கள் திட்டுவதுடனும், கொள்கை வகுப்பதுடனும் தங்களுடைய பங்குகளினை முடித்து கொள்ளுகின்றனர். இத்தகைய நிறுவனங்களின் நிதியீட்டத்தில் தயாரிக்கப்பட்ட திட்டங்களும், கொள்கை வண்ண அட்டைகளுடன் உயர் அதிகாரிகளின் அலுமாரிகளிளை அழகுபடுத்துகின்றன.

சுற்றுலா அபிவிருத்தி என்பது வடக்கில் காணப்படுகின்ற மக்களுடைய பண்பாட்டு, ஒழுக்க விழுமியங்களுக்கு இசைந்தவையாகவே இருக்க வேண்டும். அவ்வாறு அமைகின்ற போதுதான் சுற்றுலாத் துறையானது மக்களுடன் இசைந்த நிலைபேண் தன்மையைக் கொண்டிருக்கும் வளர்ச்சி பெறும்.

உலக சுற்றுலா தினம்

1980ம் ஆண்டு புரட்டாதி 27” இருந்து உலகெங்கும் உலக சுற்றுலா தினமானது பல்வேறுபட்ட கருப்பொருள்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1970ம் ஆண்டு புரட்டாதி 27 திகதி உலக சுற்றுலா நிறுவனம் (United Nations World Tourism Organization) தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து 10 ஆண்டுகள் கழித்து சுற்றுலாத்தினக் கொண்டாட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு உலக சுற்றுலாதினமானது “சுற்றுலாவும் பசுமை முதலீடும்” (Tourism and Green Investment} எனும் கருப்பொருளில் கொண்டாடப்படுகின்றது. பசுமை முதலீடு என்பது நிலைபேண் அபிவிருத்தியினை ஏற்படுத்துகின்ற வகையிலும், இயற்கைச் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் சூழலுக்கு இசைந்த நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல் போன்றவற்றினை அடிப்படை நோக்கமாகக் கொண்ட விடுதிகள், சுற்றுலாத்தல் அபிவிருத்தி நிறுவனங்கள், கம்பனிகள், மற்றும் திட்ட செயற்பாடுகள் என்பவற்றிற்கு நிதி வளங்களினை ஒதுக்கீடு செய்தலைக் குறித்து நிற்கின்றது.

பசுமை முதலீட்டினுடைய அடிப்படையான நோக்கம் யாதெனில் வணிகமானது சூழலுக்குப் நேரக்கணியமான நன்மைகளை ஈட்டித் தரக்கூடிய செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் வணிகர்கள் தமக்கான வருமானத்தை ஈட்டிக்கொள்ளுதலாகும். இங்கு வருமானமானது சூழலுக்குப் பாதகமற்ற செயற்பாடுகள் வாயிலாக உழைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளதே பசுமை முதலீட்டின் அடிப்படை நோக்கமாகும். இவ்வாறு பசுமை முதலீட்டினை ஊக்குவிக்கும் முகமாக இவ் ஆண்டு உலகெங்கிலும் சுற்றுலாத தினமானது கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தமிழ் பேசுகின்ற மக்களின் அடையாளமாகவும் கலங்கரை விளக்காகவும் இருந்து தமிழையும் தமிழ்மொழிசார் பண்பாட்டு, விழுமியங்களினையும் வளர்த்து வருகின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இவ் ஆண்டு சுற்றிலா துறையினை மிக விமாசையாகக் கொண்டாடுகின்றது. நீண்ட கொடிய யுத்தத்தினால் வாழ்விழந்து வருமானமிழந்து, செல்லும் திசையிழந்து தவிக்கின்ற ஒரு தொகுதி தமிழ் மக்களுக்கு அறிவியல் ரீதியாக தம்முடைய நிபுணத்துவத்தினை வழங்கிக் கொண்டிருக்கின்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அண்மைக்காலமாக பருவகால மாற்றம் மற்றும் அதிகரித்து வருகின்ற சூழலியல் தாக்கங்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்படுத்தி வருகின்றது. அந்தவகையில், இவ்வாறான சுற்றுலாத் தினமானது கொண்டாடப்படுவதன் வாயிலாக பசுமை முதலீடுகள் குறித்த விழிப்புணர்வுகளை முதலீட்டாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றது

இதன் பொருட்டு 2023 ஆண்டு புரட்டாதி மாதம் 27 th திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதியரங்கில் சுற்றுலாத் தினமானது வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. அத்தோடு புரட்டாதி 27 “திகதி தொடக்கம் 29ம் திகதி வரை மாலை 4.00 மணியிலிருந்து இரவு 9.00 மணிவரை வடமாகாணத்தில் காணப்படுகின்ற சிறு நடுத்தர முயற்சியாளர்களுடைய புத்துணர்வு. புதியன புனைதல் ஆகிய திறன்களை வெளிக்கொண்டுவரும் முகமாக உணவு மற்றும் கைவினைப் பொருட்களின் சந்தையும், மேலும் தமிழன் எதை இழப்பினும் தம் பண்பாட்டு விழுமியங்களை இழக்கான் என்கின்ற அடிப்படையில் தமிழர்களுடைய பண்பாட்டினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கலைநிகழ்வுகளான கூத்து, சிலம்பாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்வுகளும் கண்ணுக்கு விருந்தளிக்கவுள்ளன. மேலும் 27 திகதி காலை நிகழ்கின்ற ஆரம்ப நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதற்கொண்டு இலங்கையின் புகழ்பூத்த சுற்றுலாத்துறைப் பேராசிரியர்கள், திட்ட வகுப்பாளர்கள், தனியார் துறை நிபுணர்கள் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நிகழ்வினை சிறப்பிப்பார்கள். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து எனையோரையும் மகிழ்விப்பதுடன் நாட்டின் சுவீட்சத்தையும் மேம்படுத்தலம்

பேராசிரியர் சி. சிவேசன்

நிகழ்ச்சித் தலைவர் - சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகதமைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

உலக சுற்றுலா தினம் 2023, தொடர்பான நிகழ்வுகள் புதன்கிழமை 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதிவரை 3 தினங்கள் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்வையொட்டி  உணவு மற்றும் கைப்பொருள் சந்தை,  கலாசாரத்  திருவிழா என்பனவு இடம்பெறும் .  

யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் புதன்கிழமை (27) ஆம் திகதி காலை 8.30 மணி முதல் 12 மணிவரை பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள், உலக சுற்றுலா தினம் தொடர்பில் சிறப்புரையற்றவுள்ளத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54