டியாகோகார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் போராட்டத்திற்குவெற்றி - நாடு கடத்தும் தீர்மானத்தை வாபஸ் பெற அதிகாரிகள் இணக்கம்

Published By: Rajeeban

26 Sep, 2023 | 04:45 PM
image

இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில்  கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

இலங்கையிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக சிறிய மீன்பிடி படகில் புறப்பட்டவர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு டியாகோ கார்சியாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

2021 ஒக்டோபர் 3 முதல் அவர்கள் அந்த தீவில் சிக்குண்டுள்ளனர்.

அவர்கள் புகலிடக்கோரிக்கையை கோரியவேளை பிஐஓடி ஆணையாளர் அவர்களை சட்டபூர்வமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என தெரிவித்தார்.

புகலிடக்கோரிக்கையாளர்கள் பத்து பேர் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.பிஐஓடி ஆணையாளரின் தீர்மானம் எடுக்கும் நடைமுறை பிழையானது என வாதிட்டனர்.

அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நீதித்துறை மறு ஆய்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் பிஐஓடி ஆணையாளரை பிரதிநிதித்துவம் செய்த சட்டத்தரணிகள் தங்கள் ஆதாரங்களை மறுபரிசீலனை செய்வதற்கும் தங்கள் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் இணங்கினர்.

ஆணையாளர் தற்போது குறிப்பிட்டபத்து பேரினதும் பாதுகாப்பு கோரிக்கைகளை  மறுபரிசீலனை செய்ய இணங்கியுள்ளார், இந்த வழக்குடன் தொடர்பற்ற புதியவர்கள் இந்த மறுபரிசீலனைiயை முன்னெடுப்பார்கள்.

டியாகோர் கார்சியாவில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவதற்கான உத்தரவை ஆணையாளர் விலக்கிக்கொண்டுள்ளார்- அவர்களின் பாதுகாப்பு கோரிக்கைகள் புதிதாக ஆராயப்படும்.

எங்கள் நீதித்துறை மறுஆய்வுக்கு பதிலளிக்கும் வகையில் புகலிடக் கோரிக்கைகளைத் தீர்மானிப்பதற்கான டியாகோ கார்சியாவில் உள்ள அமைப்பை மாற்றியமைத்து அது தயாரித்த சட்டவிரோத முடிவுகளை திரும்பப் பெறுவதற்கான ஆணையரின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.என புகலிடக்கோரிக்கையாளர்கள் எட்டுபேரின் சொலிசிட்டர்களான டொம்சோர்ட் ஓவ் லேய் டே தெரிவித்துள்ளார்

சர்வதேச பாதுகாப்பிற்கான கோரிக்கைகளை மிகவும் அவதானமாக கவனத்துடன் ஆராயவேண்டும் பிஐஓடி ஆணையாளரின் தீர்மானம் அந்த தராதரத்தை பின்பற்றவில்லை- சர்வதேச பாதுகாப்பிற்கான அவர்களின் கோரிக்கைகளை நியாயமாகவும் உரிய முறைப்படியும் ஆராய்வதற்காக  டியாகோ கார்சியாவில் உள்ளவர்களை மூன்றாவது நாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலால் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணின் பெற்றோர்...

2023-11-29 17:28:42
news-image

வீதியை கடக்க முற்பட்ட பெண் கார்...

2023-11-29 17:27:39
news-image

"மலி" யானை மரணம் ; இலங்கையிடம்...

2023-11-29 17:06:54
news-image

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு :...

2023-11-29 16:58:43
news-image

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

2023-11-29 17:52:14
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க...

2023-11-29 16:56:30
news-image

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு...

2023-11-29 16:52:28
news-image

முன்னாள் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு...

2023-11-29 16:34:10
news-image

இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங்...

2023-11-29 16:46:07
news-image

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,...

2023-11-29 16:46:40
news-image

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை...

2023-11-29 16:36:57
news-image

எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக...

2023-11-29 16:33:03