சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு எண்டே கிடையாது' ரசிகர்களை கவருமா?

26 Sep, 2023 | 05:25 PM
image

தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படத்தின் தலைப்பிற்காக.. அப்படத்திற்கு வரவேற்பு கிடைத்த வரலாறு இருக்கிறது. அந்த வகையில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவால் உச்சரிக்கப்பட்டு.. பிரபலமான 'எனக்கு எண்டே கிடையாது' என்ற டயலாக், புதிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களை கவருமா? கவராதா? என்பது குறித்து படக் குழுவினர் வெளியீட்டுக்கு முன்னர் நடத்திய விளம்பரப்படுத்தும் நிகழ்வில் விவாதமாக மாற்றம் பெற்றது.‌

இது தொடர்பாக இயக்குநர் விக்ரம் ரமேஷ் பேசுகையில், ''இந்த திரைப்படத்தில் நடித்துள்ள ஒரு கதாபாத்திரம் ஒரே நாளில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. அவரது வாழ்க்கையும், இந்தப் படத்தின் கதையும் நிறைவு பெறும் என பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில்... மீண்டும் புதிதாக மற்றொரு விடயம் தொடரும். இது ரசனைக்குரியதாகவும் இருக்கும். அதனால் இப்படத்திற்கு 'எனக்கு எண்டே கிடையாது' என தலைப்பை சூட்டினோம். இந்தத் திரைப்படம் நகைச்சுவை, சென்டிமென்ட், திரில்லர் என அனைத்து அம்சங்களும் கலவையாக இடம்பெற்று இருக்கிறது. இது ரசிகர்களை கவரும்'' என்றார்.

ஹங்கிரி வுல்ஃப் என்டர்டெய்ன்மென்ட் & புரொடக்ஷன்ஸ் எல் எல் பி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்திருக்கும் திரைப்படம் 'எனக்கு என்று கிடையாது'. இதில் விக்ரம் ரமேஷ், கார்த்திக் வெங்கட்ராமன், ஸ்வயம் சித்தா, சிவக்குமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கலாச்சரண் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் எனும் பட நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரான்சில் வெளியாகும் 'பறவாதி' திரைப்படம்

2025-01-18 06:29:01
news-image

நடிகர் அப்புகுட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்'...

2025-01-17 15:33:58
news-image

பவன் கல்யாண் நடிக்கும் 'ஹர ஹர...

2025-01-17 15:32:15
news-image

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸஸ் &...

2025-01-17 15:31:55
news-image

சாதனை படைக்கும் அஜித் குமாரின் 'விடாமுயற்சி'...

2025-01-17 17:19:13
news-image

நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்'...

2025-01-16 17:05:13
news-image

பார்த்திபன் வெளியிட்ட ' புரவியாட்டம் '...

2025-01-16 17:04:38
news-image

நடிகர் மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின்...

2025-01-16 17:03:46
news-image

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த விஜய் சேதுபதி...

2025-01-16 16:49:05
news-image

நடிகர் 'கெத்து' தினேஷ் நடிக்கும் 'கருப்பு...

2025-01-16 17:41:35
news-image

காதலர் தினத்தன்று வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின்...

2025-01-16 16:45:44
news-image

கத்திக்குத்து தாக்குதல் ; நடிகர் சயிப்...

2025-01-16 16:49:31