ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

26 Sep, 2023 | 05:23 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில், நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகிலும் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். 

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது....''எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் சொன்ன கதையை கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிடம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். படப்பிடிப்பில் பங்கு பெற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸை டேக் செய்து குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'அயலான்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right