இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்வதற்கான எளிய உத்தி...?

26 Sep, 2023 | 05:14 PM
image

இன்றைய திகதியில் உலகளவில் நீரிழிவு நோயாளிகளாகவும், ரத்த அழுத்த நோயாளிகளாகவும் அதிக அளவில் தெற்காசியவினர் தான் அதிகரித்து வருகின்றனர் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் உலகளவில் இதய நோயால் பாதிக்கப்படும் தெற்காசியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்கள்.‌

ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது... ரத்த அழுத்த அளவினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது... உடல் எடையை சீராக பராமரிப்பது... மது மற்றும் புகையை முற்றிலுமாக தவிர்ப்பது... சத்துள்ள உணவினை சீரான இடைவெளியில் சாப்பிடுவது.. நாளாந்தம் உடற்பயிற்சியினை தொடர்ந்து மேற்கொள்வது.. போன்ற விடயங்களில் தீவிர அக்கறை காட்டினால் தான் எம்முடைய இதய ஆரோக்கியம் சீராக இருக்கும்.‌

இதய ஆரோக்கியம் என்பது சீரான இதய துடிப்பினையும் உள்ளடக்கியது. இதயத்துடிப்பு சீராக இயங்குவதற்கும் சீரற்ற தன்மையில் இயங்குவதற்கும் எம்முடைய மூளையில் உள்ள சுரப்பிகள் தான் காரணம்.

மூளையில் உள்ள சுரப்பிகள் தான்... இதயத் துடிப்பின் ரிதம் எனப்படும் லயத்தையும், இதயத்துடிப்பின் இயல்பான வேகத்தையும் சீராக பராமரிக்கிறது.

உங்கள் இதயத்துடிப்பு சீராக இயங்குவதற்கு மருத்துவ நிபுணர்கள் நாள்தோறும் மூச்சுப் பயிற்சிகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகிறார்கள். இத்தகைய பயிற்சியை காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் ஒரு முறை ... இரவில் படுக்கைக்கு உறங்க செல்லும் முன் ஒரு முறை.. என ஒரு நாளைக்கு இரண்டு முறை என பயிற்சி எடுத்தால், இதயத்துடிப்பு சீராக இயங்கும்.

மேலும் இத்தகைய பயிற்சியின் தொடக்கத்தில் மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். உள்ளிழுத்த மூச்சை பத்து வினாடி வரை அடக்கி வைக்க வேண்டும். பிறகு அதனை சீராக வெளியிட வேண்டும். இந்த மூச்சுப் பயிற்சி உங்கள் இதயத்துடிப்பையும், உங்கள் இதயத்துடிப்பின் ஆரோக்கியத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூளைக்கும் பயன்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right