சீனகப்பல் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிவழங்கவில்லை- அலிசப்ரி

Published By: Rajeeban

26 Sep, 2023 | 12:08 PM
image

சீன கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவின் கப்பல் இலங்கையில் தரித்துநிற்பதற்கு இலங்கை அனுமதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள  அலிசப்ரி இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் இலங்கையின் பாதுகாப்பு கரிசனைகள் என மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி சியான் ஆறு என்ற சீனா கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வரவுள்ளமை மற்றும் இந்தியாவின் கரிசனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அலி சப்ரி  வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கை வருவது குறித்து இலங்கையிடம் நிலையான இயக்க முறை உள்ளது இது குறித்து இந்தியா உட்பட நேசநாடுகளுடன் கலந்தாலோசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சில காலமாக உரையாடலொன்று இடம்பெறுகின்றது இந்தியா நீண்டகாலமாக தனது கரிசனைகளை வெளியிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் நாங்கள் தற்போது வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கை வருவது குறித்து இலங்கையிடம் நிலையான இயக்க முறையொன்றை உருவாக்கியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனை உருவாக்கும்போது இந்தியா உட்பட பல நேசநாடுகளுடன் அது குறித்து ஆராய்ந்தோம் வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கையின் நிலையான இயக்க முறையை பின்பற்றுகின்ற வரை பிரச்சினையில்லை எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அதனை பின்பற்றாவிட்டால் பிரச்சினையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒக்டோபரில் சி யான் 6 இலங்கையில் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை இன்னமும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17
news-image

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை நாட்டுக்கு பயனளிக்கும்...

2025-01-21 19:47:28
news-image

ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒற்றைத்தீர்வை உடனடியாக யாராலும்...

2025-01-21 22:42:17
news-image

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் சபையில்...

2025-01-21 22:34:09
news-image

மஹிந்தவின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு...

2025-01-21 17:47:47
news-image

சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின...

2025-01-21 15:51:54
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் உரிமை...

2025-01-21 17:31:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் அதி சொகுசு...

2025-01-21 17:42:13
news-image

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாதணி...

2025-01-21 17:41:00