AI - இல் இயங்கும் ஆரம்ப நிலை புற்றுநோயை கண்டறிதல் தொழில்நுட்பத்தை தழுவிய முதல் தெற்காசிய நாடாக இலங்கை

26 Sep, 2023 | 10:52 AM
image

இலங்கையில் அதிகரித்து வரும் புற்றுநோயாளர்களின் போக்கானது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

கடந்த காலங்களை பார்க்கும் போது, இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2005 இல் 13,372 ஆக இருந்து 2019 இல் 31,848 ஆக அதிகரித்துள்ளது. இது 138% எனும் குறிப்பிடும்படியான அதிகரிப்பைக் காட்டுகிறது.

உலகளாவிய ரீதியிலும் புற்றுநோய் பதிவுகள் இதே விகிதத்திலேயே உயர்ந்துள்ளன. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதே புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான மிகவும் பயனுள்ள உத்திகளில் ஒன்றாகும் என, உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட ஏனைய முன்னணி சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆரம்பநிலை கண்டறிதல் சிகிச்சை விளைவுகளுக்கு மிகவும் பயனுள்ள வழி வகுப்பதோடு, அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பல உள்ளக புற்றுநோய்களை கண்டறிவதற்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட, உடலுக்குள் எவ்வித கருவிகளையும் செலுத்த அவசியமற்ற, ஸ்கேனிங் மென்பொருளான Ophtascan இன் நம்பிக்கைக்குரிய புத்தாக்க கண்டுபிடிப்பானது ஒரு புதிய மைல்கல்லாகும்.

இவ்வாறான வகையில் உள்ளடங்கும் ஒரே மென்பொருளும், காலத்திற்கு அவசியமான வகையில், நேரடியாக பார்வையிடும் ஒரேயொரு ஸ்கேனிங் தீர்வுமான Ophtascan, புற்றுநோய்க்குஆரம்பநிலை கண்டறிதல் சிகிச்சை விளைவுகளுக்கு மிகவும் பயனுள்ள வழி வகுப்பதோடு, அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பல உள்ளக புற்றுநோய்களை கண்டறிவதற்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட, உடலுக்குள் எவ்வித கருவிகளையும் செலுத்த அவசியமற்ற, ஸ்கேனிங் மென்பொருளான Ophtascan இன் நம்பிக்கைக்குரிய புத்தாக்க கண்டுபிடிப்பானது ஒரு புதிய மைல்கல்லாகும்.

இவ்வாறான வகையில் உள்ளடங்கும் ஒரே மென்பொருளும், காலத்திற்கு அவசியமான வகையில், நேரடியாக பார்வையிடும் ஒரேயொரு ஸ்கேனிங் தீர்வுமான Ophtascan, புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக காணப்படுகிறது.

தெற்காசியாவில் முதன்முறையாக தங்களது முன்னோடியான தொழில்நுட்பத்தை Ophtascan அறிமுகப்படுத்துகிறது. இது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றலின் (Machine Learning) ஆற்றலைப் பயன்படுத்தி பல்வேறு வகையான புற்றுநோய்களை உடலுக்குள் எவ்வித கருவிகளையும் செலுத்தாமல் கண்டறிய உதவுகிறது.

நோயாளியின் கருவிழியின் தோற்றத்தை ஆழமாக பகுப்பாய்வு செய்வதன் மூலம், நுரையீரல், சுக்கிலச் சுரப்பி (prostate), மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு உள்ளக புற்றுநோய்களைக் கண்டறிவதில் 98% இற்கும் அதிகமான துல்லியத் தன்மையை இது கொண்டுள்ளது. 

மருத்துவ சோதனைகளின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதியையும், அங்கீகாரத்தையும் Ophtascan கொண்டுள்ளது.

அத்துடன், இத்தீர்வானது 4 ஐரோப்பிய நாடுகளிலும் ஆபிரிக்காவின் ஒரு சில பகுதிகளிலும் பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் இது GDPR இணக்கப்பாட்டை கொண்டுள்ளதோடு, தரவுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பாரிய அளவீட்டை உறுதி செய்வதன் மூலம் ஒப்பற்ற செயலாக்கத்தை புரிகிறது.

தற்போது, Opthascan இலங்கையிலும் பயன்பாட்டில் உள்ளது. அரசாங்கத்தின் உதவியுடன் இந்த மாற்றம் மிக்க தொழில்நுட்பத்தை இலங்கைக்குள் அனைவரும் பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. நாட்டின் புற்றுநோய்க்கு எதிராக முயற்சித்து ஒருங்கிணைந்து போராடும் ஒரு கணிசமான பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.

ஆரம்பநிலை அடையாளத்தின் மூலமான ஆற்றலானது, உடனடி மருத்துவ தீர்வுகள் மற்றும் பயனுள்ள சிகிச்சை நெறிமுறைகளை வழங்குவதற்கு உதவும்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரன் சம்புநாதன், "எமது சமூகத்தில் புற்றுநோயின் தாக்கத்தைத் தணிப்பதற்கான கூட்டான உறுதியுடன் அதிநவீன தொழில்நுட்பம் இணைந்துள்ள நம்பிக்கையின் ஒரு புதிய சகாப்தத்தை Ophtascan அறிமுகப்படுத்துகிறது." என்றார்.

ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும் அதன் மூலம் அதனை மாற்றும் ஆற்றலுக்கான Ophtascan இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம், புற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்ற, ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதை அது உறுதியளிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் வங்கி உலக வங்கி தினத்தை...

2023-12-06 12:08:12
news-image

இலங்கை சந்தைக்கு சூரிய சக்தியில் இயங்கும்...

2023-12-05 17:04:15
news-image

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவும்...

2023-12-05 17:03:04
news-image

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு...

2023-12-05 12:50:24
news-image

ஆளுமையுடன் 6வது அகவையில் Capital FM! ...

2023-12-01 19:15:50
news-image

25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் Ocean...

2023-12-01 10:43:40
news-image

சிறந்த முறையில் பரிவர்த்தனை : RDB...

2023-11-30 18:40:52
news-image

பாசிக்குடா மீளத்திறக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் விசேட...

2023-11-29 20:54:15
news-image

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதியியல்...

2023-11-29 16:46:41
news-image

MMBL Money Transfer தனது 3000...

2023-11-27 18:00:41
news-image

தரச்சிறப்பைக் கொண்டாடுவோம் : பல விருதுகளையும்...

2023-11-24 14:10:30
news-image

2023இன் 9 மாதங்களுக்கு ரூபா 11.4...

2023-11-23 18:12:34