John Keells Properties தனது மற்றுமொரு குடியிருப்புத் திட்டமான 'Viman'ஐ அறிமுகப்படுத்துகிறது

26 Sep, 2023 | 10:25 AM
image

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள John Keells Properties  ஜா-எல நகரின் மையப்பகுதியில் சமகால வாழ்க்கையை மாற்றும் வகையில் தனது புதிய  குடியிருப்புத் திட்டமான 'Viman' ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது. 

புகழ்பெற்ற John Keells Holdings PLC நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்பான பிரிவாக விளங்கும் ஜான் கீல்ஸ் சொத்துக்கள் நிறுவனம், கனவு வாழ்கைக்கான இடங்கள் மற்றும் விதிவிலக்கான அனுபவங்களை வழங்கப் புதுமையான அணுகுமுறையுடன் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி ரியல்ஸ் எஸ்டேட் சந்தையில் மதிப்புமிக்க நற்பெயரை சம்பாதித்துள்ளது. 

'புதிய உலகத்தை உருவாக்குதல்' என்ற நோக்கத்துக்கு இணங்கும் வகையிலும், வாழ்க்கையின் அனுபவங்களை மறுவடிமைப்பதற்கு இடமளிக்கும் வகையிலும் அமையப்பெற்றுள்ள Viman குடியிருப்புத் திட்டம் ஜான் கீல்ஸ் சொத்துக்கள் நிறுவனத்தின் தனித்துவமான புதிய முயற்சியைப் பிரதிபலிக்கிறது. 6 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தீரணத்தில், சௌகரியமான நவீன 418 தொடர்மாடி வீடுகளைக் கொண்டிருப்பதுடன், Viman குடியிருப்புத் திட்டத்தின் வடிவமைப்பானது சிறிய நகரின் கட்டமைப்பின் அழகைத் தக்கவைக்கும் அதேநேரம், கொழும்பு நகரை இலகுவில் அணுகக் கூடியதாகவும், பாதுகாப்பு, குடும்பங்களுக்கு நட்பான சூழலை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

John Keells Holdings PLC நிறுவனத்தின் உடமைப் பிரிவின் தலைவர் நயன மாவில்மட குறிப்பிடுகையில், ஜான் கீல்ஸ் சொத்துக்கள் நிறுவனத்தின் சமீபத்தைய எல்லையாக இருக்கும் Viman ஐ அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இது வெறுமனே ஒரு குடியிருப்பாக மாத்திரம் அமையாது என நாம் நம்புகின்றோம். இது சிறிய நகரின் அரவணைப்பில் மூழ்கியிருக்கும் ஒரு வாழ்க்கை முறையாக அமையும். சமநிலை, இயற்கை மற்றும் நவீன வசதி போன்ற அடிப்படைகளால் ஈர்க்கப்பட்டு, சுற்றுச் சூழல் பற்றிய கரிசனை, பல்வேறு இடங்களுக்கான அணுகல், சமூக உணர்வை வளர்த்தல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட குடியிருப்புக்களைக் கொண்ட தொகுதியாக இது காணப்படுகிறது. ஸ்மார்ட் நகரமயமாக்கலுக்கு மக்களை மையாகக் கொண்ட திட்டமாக இது அமைந்துள்ளது' என்றார்.

ஜா-எல நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்புக்கள், சுப்பர்மார்க்கட்டுக்கள், வங்கிகள், உணவகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இலகுவான அணுகலைக் கொண்டுள்ளன. மேலும், Viman குடியிருப்புத் திட்டமானது கொழும்புத் துறைமுக நெடுஞ்சாலைக்கு அருகாமையில் அமைந்திருப்பதுடன், ஜா-எல மற்றும் கொழும்புக்கு இடையே விதிவிலக்கான இணைப்பை எளிதாக்குகிறது. இந்த மூலோபாய அமைவிடமானது சௌகரியத்தை அதிகரிப்பது மாத்திரமன்றி, குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு செயற்திறன்மிக்க பயண வழியையும் உறுதிப்படுத்துகிறது.

பசுமை மிக்க மத்திய தோட்டப்பகுதியில் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக் கூடம், தியான கூடம், கிளப்ஹவுஸ், சிறுவர்கள் விளையாட்டு இடம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம், பல்வேறு தேவைகளுக்கான வெளியக விளையாட்டரங்கம், மின்னியல் வாகனங்களுக்கான மின்னேற்ற வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அடங்குகின்றன. இந்த விசேட அம்சங்கள் குடியிருப்பாளர்கள் தமக்கிடையிலான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும், குடும்பமாக வாழ்வதற்கான சிறந்த சூழலையும் உருவாக்குகின்றது.

ஜான் கீல்ஸ் சொத்துக்கள் நிறுவனம் நவீனத்துவம் மற்றும் நிலைபேறான வாழ்க்கைமுறை ஆகிய இரண்டு விடயங்கள் மீதும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக, Viman  குடியிருப்புத் திட்டமானது வலுசக்தி நிறைந்த சூரிய சக்தியால் இயங்கும் வீடுகள் மற்றும் ஏராளமான பசுமையான இடங்கள் மற்றும் வலுவான சமூக உணர்வை வளர்ப்பது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. 

ஜான் கீல்ஸ் சொத்துக்கள் நிறுவனமானது அடுக்குமனைக் குடியிருப்புத் தொகுதிகளின் முன்னேற்றத்தில் முன்னிலை வகிப்பதுடன், இலங்கையின் நகர்புறக் குடியிருப்பின் கட்டடச் சூழலை சீர் செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளது. நிறுவனத்தின் பரந்துபட்ட வணிகப் பிரிவுகளின் சிறந்த மற்றும் அற்புதமான வடிவமைப்புக்களுடன் விளங்கும் The Emperor, The Monarch, 7th Sense, OnThree20, TRI-ZEN மற்றும் 4.5 மில்லியன் சதுர அடிகளுடன் ஒன்றிணைக்கப்பட்ட Cinnamon Life போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

'Viman' குடியிருப்புத் திட்டம் தொடர்பில் மேலதிக தகவல்கள் மற்றும் இதில் காணப்படும் வசதிகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள  076 062 062 என்ற தொலைபேசி இலக்கத்தில் John Keells Properties நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Blade V50 வடிவமைப்புடன் கூடிய புத்தம்...

2023-12-07 19:27:42
news-image

மக்கள் வங்கி உலக வங்கி தினத்தை...

2023-12-06 12:08:12
news-image

இலங்கை சந்தைக்கு சூரிய சக்தியில் இயங்கும்...

2023-12-05 17:04:15
news-image

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவும்...

2023-12-05 17:03:04
news-image

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு...

2023-12-05 12:50:24
news-image

ஆளுமையுடன் 6வது அகவையில் Capital FM! ...

2023-12-01 19:15:50
news-image

25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் Ocean...

2023-12-01 10:43:40
news-image

சிறந்த முறையில் பரிவர்த்தனை : RDB...

2023-11-30 18:40:52
news-image

பாசிக்குடா மீளத்திறக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் விசேட...

2023-11-29 20:54:15
news-image

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதியியல்...

2023-11-29 16:46:41
news-image

MMBL Money Transfer தனது 3000...

2023-11-27 18:00:41
news-image

தரச்சிறப்பைக் கொண்டாடுவோம் : பல விருதுகளையும்...

2023-11-24 14:10:30