அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக தலைமையில் புதிய கூட்டணி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

25 Sep, 2023 | 05:44 PM
image

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள்இ எம்.பி.க்கள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.

அதிமுக தலைவர்களை சீண்டும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வந்தார். இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என செப்டம்பர் 18-ந் தேதியும் நேற்றும் அதிமுக இரு முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் எடபபாடி பழனிசாமி தலைமை வகித்தார்.

பாஜக வேண்டவே வேண்டாம்: இந்தக் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துதான் ஆக வேண்டும்; அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள்இ முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.

பாஜகவை பகைத்தால் விபரீதம்: ஆனால் டெல்லி பாஜகவிடம் வசமாக சிக்கி இருக்கிறோம்; இந்த சூழ்நிலையில் பாஜகவை அனுசரித்துதான் போக வேண்டும்; பாஜக கேட்கும் தொகுதிகளை அதாவது லோக்சபா தேர்தலில் பாஜக கேட்கிற 20 தொகுதிகளைக் கொடுத்துவிட்டாலே பாதி பிரச்சனை முடிந்துவிடும்; அதனால் தேவை இல்லாமல் பாஜகவுடன் மோத வேண்டம; அப்படி மோதுவது என முடிவெடுத்துவிட்டால் அதிமுகவுக்குள் தேவை இல்லாத குழப்பங்கள் தானாக வரும்; அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என சில தலைவர்களும் பேசி இருக்கின்றனர். இத்தகைய பேச்சுகளுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

அனல் பறக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. செல்போனுக்கு தடையாமே! அப்ப ஏதோ பெரிசா வெடிக்குமோ அனல் பறக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. செல்போனுக்கு தடையாமே! அப்ப ஏதோ பெரிசா வெடிக்குமோ

பாஜக கூட்டணிக்கு முழுக்கு- தீர்மானம்: இந்தக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாஜக தவிர இதர கட்சிகளுடன் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவும் அதிமுக முடிவு செய்தது. இதனை அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் அறிவித்தார். பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் மிருகக்காட்சிசாலையின் புலி கூட்டிலிருந்து ஆணின்...

2023-12-07 16:26:02
news-image

காசாவில் ஒக்டோபரில் இடம்பெற்ற தாக்குதலிற்கு இஸ்ரேல்...

2023-12-07 15:46:42
news-image

காசா மக்களை எதிரியின் கரங்களை நோக்கி...

2023-12-07 13:11:08
news-image

தந்தையை தேடிச் சென்ற மகன் மழை...

2023-12-07 12:31:49
news-image

எவரையும் இழக்காத எவரையும் காசாவில் கண்டுபிடிப்பது...

2023-12-07 12:17:16
news-image

வெள்ளத்தில் சிக்கித் தவித்த தம்மை காப்பாற்றிய...

2023-12-07 12:11:51
news-image

காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் எதிரொலி: இந்திய...

2023-12-07 11:31:21
news-image

ஹமாஸ் அமைப்பின் தலைவரின் வீட்டை சுற்றிவளைத்துள்ளோம்-...

2023-12-07 10:42:25
news-image

அமெரிக்காவின் நெவாடா பல்கலைகழகத்தில் துப்பாக்கி பிரயோகம்...

2023-12-07 05:58:17
news-image

புதுடில்லி அப்பலோ மருத்துவமனையில் சிறுநீரக மோசடி...

2023-12-06 13:07:37
news-image

2023 ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் சொல்...

2023-12-06 15:28:35
news-image

பசு கோமியம் மாநிலங்களில்’ பாஜக வெற்றி:...

2023-12-06 12:15:02