இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக விண்ணில் பறந்த 22 செயற்கை கோள்கள்

Published By: Vishnu

25 Sep, 2023 | 09:57 PM
image

குமார் சுகுணா

இணையம் இல்லாத மனிதனே இன்று இருக்கமுடியாது என்றவகையில் இணைய சேவையானது உலகம் எங்கிலும் பரவியுள்ளதோடு மொத்தஉலகையும் அது மனிதனின் உள்ளங்கைகளுக்குள் அடக்கிவிட்டது. ஆயினும் பல இடங்களில் இணைய சேவையானது மிகவும் மெதுவான இயக்கத்திலேயே இயங்குகின்றது.

அதாவது நாம் இணையசேவைக்கு சென்றால் மெது மெதுவாக அது இயங்குவதற்கு பல மணித்தியாளங்களை எடுக்கும். நாம் இணைய சேவையை ஆரம்பித்தால் அது இயங்க தொடங்கும் முன் நாம் வேறு பல வேலைகளை செய்துவிடலாம். இது எமக்கு எரிச்சலையே தரும். இது போன்ற விடயங்களை தடுக்கும் நோக்கில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலன்மஸ்க் புதிய திட்டம் ஒன்றை தொடங்கி அதனை செயற்படுத்தியம் வருகின்றார். அதற்கிணங்க வெள்ளிக்கிழமை (22) செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி, தொலைத்தொடர்பு ஆராய்ச்சியில்  தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, உலகின் அனைத்து பகுதிகளிலும் சீரான அதிவேக இணையதள சேவையை வழங்கும் 'ஸ்டார்லிங்க்' என்னும் மிகப் பெரிய திட்டத்தை அந்நிறுவனம் செயற்படுத்தி வருகிறது.

எலன் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங் என்ற திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் எவ்வித வேறுபாடுமின்றி அதிவேக இணையதளத்தை வழங்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திட்டத்தில் மேலும் 7,518 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு அமெரிக்க தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

முதலில் அனுமதி பெறப்பட்ட 4,425 செயற்கைக்கோள்கள் பூமியின் மேற்பரப்பில் சுமார் 1,110 கிலோமீற்றர் முதல் 1,325 கிலோமீற்றர் உயரத்தில் சுற்றி வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 7,518 செயற்கைக்கோள்கள் 335 முதல் 346 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட தூரத்தில் பறக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஸ்டார்லிங்க்' திட்டத்தில் பாரம்பரிய ரேடியோ அலைகளுக்கு பதிலாக லேசர் அலைகள் பயன்படுத்தப்படுவதால், ஒரு நொடிக்கு பல ஜிபி வேகத்தில் இணையதள சேவை பெற முடியுமென்று கருதப்படுகிறது.

இதற்காக தொடர்ச்சியாக ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இதுவரையில் 4,500-க்கும் அதிகமான ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் புவி வட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் 22 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9  விண்கலம் மூலம் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. அவை புவி வட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி அதிவேக இணையசேவையை பயன்படுத்த முடியும். உலகில் பல்வேறு அதிரடி திட்டங்களை செயற்படுத்தி வரும் இளம் கோடிஸ்வரரான எலன் மஸ்கின் இந்த திட்டமும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முற்றுகைக்குள் யூ.எஸ். எயிட் நிறுவனமும் அரசாங்க...

2025-02-19 09:53:29
news-image

ரணில் தரப்புடன் கூட்டு ; காலை...

2025-02-18 13:26:36
news-image

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...

2025-02-17 21:09:44
news-image

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின்...

2025-02-18 11:22:36
news-image

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...

2025-02-17 14:25:08
news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58