தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களால் ஞாயிற்றுக்கிழமை (24) கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ஊர்தியின் இரண்டாம் நாள் பயணம் மாங்குளத்தில் திங்கட்கிழமை (25) காலை ஆரம்பிக்கப்பட்டது.
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் ஞாயிற்றுக்கிழமை (24) முன்பாக ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ஊர்தி கொடிகாமத்தில் இருந்து முழங்காவில் வெள்ளாங்குளம் மல்லாவி ஊடாக மாங்குளம் நகரை வந்தடைந்தது.
இந்த ஊர்தி பவனியின் இரண்டாம் நாளான திங்கட்கிழமை (25) காலை மாங்குளம் நகரில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பழனியாண்டி நாகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க.சுகிர்தன் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மக்களின் உணர்வுபூர்வமான அஞ்சலியை தொடர்ந்து ஊர்தி பவனியானது வவுனியா நோக்கி பயணமாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM