நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'வணங்கான்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வணங்கான்'. இதில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலாவின் சொந்த பட நிறுவனமான பி ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது. இதனை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.
கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்திருக்கும் சூழலில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் அருண் விஜயின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதாலும், ஒரு கையில் தந்தை பெரியாரின் உருவ சிலையும், மற்றொரு கையில் விநாயகரின் திருவுருவ சிலையையும் அரவணைத்தவாறு தோன்றுவது.. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே பாலாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வணங்கான்' திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடித்தார் என்பதும், பிறகு பல்வேறு காரணங்களால் சூர்யா இப்படத்திலிருந்து விலகினார் என்பதும், சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிப்பில் இப்படம் தயாராகி நிறைவடைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM