எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது பிள்ளைகளும் அகதிகள் - அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை சமமாக நடத்தவேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கும் இலங்கை பெண்

Published By: Rajeeban

25 Sep, 2023 | 12:36 PM
image

அவுஸ்திரேலியாவின் ஏனைய மக்களை போல அகதிகளையும் சமமாக நடத்தவேண்டும் என கோரி இலங்கை ஈரானை சேர்ந்த 20 பெண் அகதிகள் மெல்பேர்னில் குடிவரவு துறை அமைச்சர் அன்ரூ கைல்சின் அலுவலகத்திலிருந்து கான்பெராவின் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபேரணியை ஆரம்பித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக வாழும் அகதிகள் புகலிடக்கோரிக்கையர்களை சமமாக நடத்தவேண்டும் என கோரியே பெண்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ள பெண்கள் இன்று மத்திய விக்டோரியாவின் மத்திய பகுதியில் உள்ள நகம்பையை சென்றடைந்தனர்.

முன்னைய அரசாங்கம் அகதிகளின் கோரிக்கையை வேகமாக பரிசீலித்ததால் பாதிக்கப்பட்ட பத்தாயிரம் பேரிற்கு நிரந்தர விசாவை வழங்க கோரி அகதிப்பெண்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வருட ஆரம்;பத்தில் 2012 முதல் 2014 வரையான காலப்பகுதியில்  அவுஸ்திரேலியா சென்ற - தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்ட 19000 அகதிகளிற்கு நிரந்தரவதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் இந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலியா சென்ற 12000 அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த கீத்தா இராமசந்திரன் இந்த நடைபயணத்திற்கு தலைமை தாங்குகின்றார்.

நான் மூன்று பிள்ளைகளின் தாய் எனது  கடைசி மகள் அவுஸ்திரேலியாவில் பிறந்தவள்  அவளுக்கு வேறு நாடோ வீடோ தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான ஏனைய பெண்களை நான் இலங்கையில் வன்முறைகளிற்கு நடுவில் வளர்ந்தேன் எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது பிள்ளைகளும் அகதிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நிச்சயமற்ற தன்மையையும் வன்முறையையும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றைய தலைiமுறைக்கு கடத்துகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனக்காக எனது குடும்பத்திற்காக மாத்திரம் அல்ல  நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களிற்காக  இந்த நிலைiயை மாற்ற விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எனது குழந்தைகளிற்கு மருத்துவம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஏனைய உதவிகள் மறுக்கப்படுகின்றன என பேரணியில் கலந்துகொண்டுள்ள ஈரானை சேர்ந்த சமிரா டேர்க்கியன் ஜடே தெரிவித்துள்ளார்

விசா கட்டுப்பாடுகள் எங்கள் திறமைகளை முடக்குகின்றன எங்கள் முழுத்திறனையும் அடைவதை தடை செய்கின்றன எனதெரிவித்துள்ள அவர் பல வருடங்களாக ஈரானின் உள்நாட்டு போரில் நாங்கள் சிக்குண்டோம் நான் எனது நாட்டில் கிடைக்காதபாதுகாப்பை தேடிஇந்த நாட்டில் அடைக்கலம் புகுந்தேன் அவுஸ்திரேலியா ஏன் எங்களை இன்னமும் இரக்கமற்ற முறையில் நடத்துகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் மிருகக்காட்சிசாலையின் புலி கூட்டிலிருந்து ஆணின்...

2023-12-07 16:26:02
news-image

காசாவில் ஒக்டோபரில் இடம்பெற்ற தாக்குதலிற்கு இஸ்ரேல்...

2023-12-07 15:46:42
news-image

காசா மக்களை எதிரியின் கரங்களை நோக்கி...

2023-12-07 13:11:08
news-image

தந்தையை தேடிச் சென்ற மகன் மழை...

2023-12-07 12:31:49
news-image

எவரையும் இழக்காத எவரையும் காசாவில் கண்டுபிடிப்பது...

2023-12-07 12:17:16
news-image

வெள்ளத்தில் சிக்கித் தவித்த தம்மை காப்பாற்றிய...

2023-12-07 12:11:51
news-image

காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் எதிரொலி: இந்திய...

2023-12-07 11:31:21
news-image

ஹமாஸ் அமைப்பின் தலைவரின் வீட்டை சுற்றிவளைத்துள்ளோம்-...

2023-12-07 10:42:25
news-image

அமெரிக்காவின் நெவாடா பல்கலைகழகத்தில் துப்பாக்கி பிரயோகம்...

2023-12-07 05:58:17
news-image

புதுடில்லி அப்பலோ மருத்துவமனையில் சிறுநீரக மோசடி...

2023-12-06 13:07:37
news-image

2023 ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் சொல்...

2023-12-06 15:28:35
news-image

பசு கோமியம் மாநிலங்களில்’ பாஜக வெற்றி:...

2023-12-06 12:15:02