எம்மில் பலரும் செல்போன் மூலமாக பேசிக்கொண்டாலும்.. பல தருணங்களில் நேரடியாக ஒருவரை ஒருவர் சந்தித்து பேச வேண்டியதிருக்கும்.
அத்தகைய தருணங்களில் இருவரில் யாருக்கேனும் ஒருவருக்கு ஹலிடோசிஸ் எனும் வாய் துர்நாற்ற பிரச்சனை இருந்தால்.. அங்கு சங்கடங்கள் ஏற்படுவதுடன், பிரச்சனைக்கு தீர்வும் கிடைக்காமல் போகக்கூடும்.
இதனால் மருத்துவர்கள் வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு முறையாக பல் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
இதற்கு எம்முடைய குடும்ப உறுப்பினர்கள் புதினா, மவுத்வாஷ் என ஏராளமான விடயங்களை நிவாரணமாக பரிந்துரைப்பர். ஆனால் இவையெல்லாம் இப் பிரச்சனைக்கு தற்காலிகமான நிவாரணத்தை தான் வழங்குமே தவிர, நிரந்தரமான தீர்வை அளிப்பதில்லை.
சில வகையினதான உணவுகள், சில பழக்கவழக்கங்கள்.. போன்றவற்றின் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படும். சிலருக்கு வாய் துர்நாற்றத்தின் காரணமாக மூச்சு விடுவதில் சமசீரற்ற தன்மை ஏற்பட்டு, மூச்சு திணறல் கூட உண்டாகலாம். மேலும் சிலர் தங்களுடைய சுவாசம் குறித்தும் கவலை அடைவர்.
இதன் போது மருத்துவர்கள் உங்களுடைய வாய் துர்நாற்றத்திற்கான காரணத்தை ஆய்வு செய்வர். பல் துலக்குதல், நாக்கு, உள்ளாக்கு சோதனை, தண்ணீர் குடித்தல்.. போன்ற பல நிவாரண வழிமுறைகளை வலியுறுத்தி உங்கள் வாய் துர்நாற்றத்தை ஆய்வு செய்வர்.
வேறு சிலருக்கு வாயிலிருந்து ஏற்படும் வாசத்தையும், மூக்கிலிருந்து ஏற்படும் சுவாசத்தையும் தனித்தனியாக பிரித்து அறிந்து சோதிப்பர். தற்போது மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்தின் காரணமாக துர்நாற்றத்தை உருவாக்கும் ரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவிகளும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் ஊடாகவும் வாய் துர்நாற்றத்திற்கான காரணத்தை துல்லியமாக மருத்துவர்கள் அவதானிப்பர்.
பெரும்பாலான தருணங்களில் வாய் துர்நாற்றத்திற்கு ஈறுகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கும். அதையும் மருத்துவர்கள் துல்லியமாக கண்டறிந்து அதற்குரிய நிவாரண சிகிச்சையை வழங்குவர்.
உங்கள் வாய் துர்நாற்றத்தை தவிர்க்க பிரத்யேக பற்பசையை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பர். மேலும் பற்களுக்கிடையே பாக்டீரியாக்கள் படிவதால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை அகற்ற, பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்.
டொக்டர் நளினா
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM