ஒக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட டீசர்

25 Sep, 2023 | 11:46 AM
image

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'அயலான்' எனும் திரைப்படத்தின் டீசர் ஒக்டோபரில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'அயலான்'. இதில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், சரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப் புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். சயின்ஸ் ஃபிக்சனுடன் கூடிய எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் வெளியீடு குறித்து பலமுறை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி, பிறகு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நிறைவடையாததால் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் படக்குழுவினர், 'அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள விரும்பாத நாங்கள், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். படத்தின் பணிகள் நிறைவடைவதற்காக எங்களுக்கு கூடுதல் நேரம் அவசியப்பட்டது' இன்று தெரிவித்துவிட்டு, தற்போது இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாள் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அத்துடன் இப்படத்தின் டீசர் எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தாலும் தமிழ் திரையுலகில் புதிய முயற்சி என்பதால், இயக்குநர் ஆர். ரவிக்குமார்- 'இசைப் புயல்' ஏ. ஆர். ரகுமான்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் தயாராகும் ' அயலான் ' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஷாலின் 'ரத்னம்' 60 : 40

2024-04-20 17:24:06
news-image

உண்மை சம்பவங்களை தழுவி தயாராகும் 'ஒரு...

2024-04-21 07:23:44
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-21 07:24:08
news-image

நடிகர் கவினின் சம்பளத்தை மேலும் உயர்த்துமா...

2024-04-21 07:25:16
news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18