மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம் ?

Published By: Vishnu

25 Sep, 2023 | 11:43 AM
image

சுவிசிலிருந்து சண் தவராசா

மத்­திய ஆபி­ரிக்­காவின் 3 நாடுகள் இணைந்து தமக்­கி­டையே பாது­காப்பு ஒப்­பந்தம் ஒன்றைக் கைச்­சாத்­திட்­டுள்­ளன. இரா­ணுவ ஆட்­சியின் கீழ் உள்ள மாலி, புர்க்­கினா பசோ மற்றும் நைஜர் ஆகிய இந்த மூன்று நாடு­களும் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் குடி­யேற்ற நாடுகள் ஆகும்.

அண்­மையில் இரா­ணுவம் ஆட்­சியைக் கைப்­பற்­றிய நைஜர் மீது மேற்கு ஆபி­ரிக்க நாடு­களின் பொரு­ளா­தார சமூக அமைப்பு  போர் மூலம் இரா­ணுவ ஆட்­சியை அகற்றப் போவ­தாக அறி­வித்­துள்ள நிலையில் இந்தப் புதிய ஒப்­பந்தம் உரு­வாகி உள்­ளது.

முன்­ன­தாக மேற்கு ஆபி­ரிக்க நாடு­களின் பொரு­ளா­தார சமூக அமைப்பு நைஜர் மீது தாக்­குதல் தொடுத்தால், நைஜர் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக மாலி மற்றும் புர்க்­கினா பசோ ஆகிய நாடு­களின் இரா­ணு­வங்­களும் களம் இறங்கும் என ஏனைய இரு நாடு­களும் அறி­வித்­தி­ருந்த நிலையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள புதிய ஒப்­பந்தம் உலகின் கவ­னத்தை ஈர்த்­தி­ருக்­கி­றது.

‘சாஹெல் நாடு­களின் கூட்டமைப்பு’என்ற பெய­ரி­லான இந்த உடன்­ப­டிக்கை உள்­நாட்டுக் கிளர்ச்சி மற்றும் வெளி ஆக்­கி­ர­மிப்பு என்­ப­வற்றின் போது ஒரு­வ­ருக்கு ஒருவர் உத­வுதல் என்ற அடிப்­ப­டை­யி­லா­னது என இது தொடர்­பான தக­வலை சமூக ஊட­கங்­களில் பகிர்ந்து கொண்­டுள்ள மாலி இரா­ணுவத் தலைவர் அசிமி கொய்ற்றா தெரி­வித்­துள்ளார்.

இஸ்­லா­மியத் தீவி­ர­வா­தி­களின் அபா­யத்தை எதிர்­கொண்டு அதற்கு எதி­ராகப் போரா­டி­வரும் இந்த நாடு­களில் இரா­ணுவ ஆட்சி உரு­வா­கி­யதன் பின்­ன­ணியில் அவை மேற்­கு­லகின் பலத்த கண்­ட­னத்தை எதிர்­கொண்டு வரு­கின்­றன. குறிப்­பாக நைஜரில் புதி­தாகப் பத­வி­யேற்­றுள்ள இரா­ணுவ ஆட்­சியை ஏற்றுக் கொள்ள பிரான்ஸ் தொடர்ந்தும் மறுத்து வரு­கின்­றது.

அதே­வேளை, நைஜர் மீது மேற்கு ஆபி­ரிக்க நாடு­களின் பொரு­ளா­தார சமூக அமைப்பை படை­யெ­டுக்­கு­மாறு பிரான்ஸ் அர­சாங்­கமே தூண்டி வரு­வ­தாகக் குற்­றச்­சாட்­டு­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

'இந்தக் கூட்­ட­மைப்பு மூன்று நாடு­க­ளுக்கும் இடை­யி­லான இரா­ணுவ மற்றும் பொருண்­மிய நோக்­கங்­க­ளுக்­கா­னது. மூன்று நாடு­க­ளிலும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராகப் போரா­டு­வதே இதன் முக்­கிய நோக்கம்" என்­கிறார் மாலியின் பாது­காப்பு அமைச்சர்.

Abdoulaye Diop 'ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்ள ஏதா­வது ஒரு நாட்டின் இறைமை மீதோ பிர­தேச சுயா­தி­பத்­தியம் மீதோ தாக்­குதல் நடத்­தப்­ப­டு­மானால் அது அனைத்து நாடு­களின் மீதான தாக்­கு­த­லா­கவே கரு­தப்­படும். அத்­த­கைய சந்­தர்ப்­பத்தில் ஏனைய நாடுகள் தனித்தோ கூட்­டா­கவே மற்­றைய நாட்­டுக்கு உதவும்" என்­கி­றது ஒப்­பந்­தத்தின் விதி.

மேற்கு ஆபி­ரிக்க நாடு­களின் பொரு­ளா­தார சமூக அமைப்பு நைஜர் மீது படை­யெ­டுக்கப் போவ­தாக எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள நிலையில் மூன்று நாடுகள் இணைந்து இரா­ணுவ உடன்­ப­டிக்கை ஒன்றை மேற்­கொண்­டுள்­ளமை உண்­மையில் அந்தப் பிராந்­தி­யத்தில் போர் ஒன்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றதா என்ற சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.

மேற்கு ஆபி­ரிக்க நாடு­களின் பொரு­ளா­தார சமூ­கத்தின் எச்­ச­ரிக்கை வெளி­யாகிப் பல வாரங்கள் ஆகிய பின்­னரும் கூட இது­வரை படை நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான முன்­னா­யத்­தங்கள் கூட எதுவும் நிகழ்ந்­த­தா­கவும் தெரி­ய­வில்லை. அது மாத்­தி­ர­மன்றி இத்­த­கைய படை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வதை உறுப்பு நாடுகள் சில வர­வேற்­கவும் இல்லை. அத்­தோடு இவ்­வா­றான ஒரு படை நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வ­தற்குத் தேவை­யான சட்ட வரை­மு­றைகள் கூட சில உறுப்பு நாடு­க­ளிடம் இல்லை என்­பதும் நினைவில் கொள்­ளத்­தக்­கது.

இருந்தும், திடு­திப்­பென மூன்று நாடு­களின் இரா­ணுவக் கூட்டு பற்­றிய செய்தி வெளி­யா­கி­யுள்­ளமை நைஜர் மீதான படை­யெ­டுப்யை அவை உண்­மை­யி­லேயே எதிர்­பார்க்­கின்­ற­னவா அல்­லது அத்­த­கைய ஒரு படை­யெ­டுப்­புக்­கான ஆத­ரவு நிலைப்­பாட்டை உறுப்பு நாடுகள் ஒரு­மித்து எடுப்­ப­தற்கு தடை­யாக அமையும் என்ற எதிர்­பார்ப்பில் உள்­ள­னவா என்­பது தெளி­வாகத் தெரி­ய­வில்லை.

காரணம் எது­வாக இருந்­தாலும், போர்கள் தவிர்க்­கப்­பட வேண்டும் என்­பதே அமை­தியை, சமா­தா­னத்தை விரும்பும் அனைத்து மக்­க­ளி­னதும் தெரி­வாக உள்­ளது. ஆனால், போர்கள் திணிக்­கப்­படும் வேளை­களில் போரிட்டே ஆக வேண்டும் என்­ப­துவும் இயல்­பா­னதே.

அமை­தியை விரும்பும் உலகில் இன்றும் ஆங்­காங்கே போர்கள் நடை­பெற்ற வண்­ண­மேயே உள்­ளன.

அத்­த­கைய போர்கள் எதனால் உரு­வா­கின, யார் நேர­டி­யாகப் போர்­களை நடத்­து­கின்­றனர், யார் பின்­ன­ணியில் இருந்து இயக்­கு­கின்­றனர், போர்­களை முடி­வுக்குக் கொண்­டு ­வர யார் இதய சுத்­தி­யுடன் செயற்­ப­டு­கின்­றனர், யார் அத்­த­கைய முயற்­சி­க­ளுக்குத் தடை­யாக இருக்­கின்­றனர், என்­பது போன்ற கேள்­வி­க­ளுக்­கான விடைகள் எப்­போ­துமே மாறு­பா­டா­ன­வை­யா­கவே உள்­ளன. அவ­ரவர் அர­சியல் மற்றும் சார்­பு­நிலை சார்ந்தே இந்தக் கேள்­வி­க­ளுக்­கான பதில்கள் வெளி­வரும். இதில் உண்மை எது பொய் எது என்­பது கூடப் பொது­மக்­களைப் பொறுத்­த­வரை தெளி­வில்­லாத விட­யமே.

மேற்கு ஆபி­ரிக்­காவில் உண்­மை­யி­லேயே போர் நடை­பெறப் போகின்­றதா என்­பதைக் கூட சம்­பந்­தப்­பட்ட நாடுகள் தீர்­மா­னிக்கும் நிலையில் இல்லை என்­பதே உண்மை. இத்­த­கைய முடி­வுகள் பெரும்­பாலும் பலம்­மிக்க வல்­ல­ரசு வகை­யி­லான நாடு­க­ளி­னா­லேயே முடிவு செய்­யப்­ப­டு­கின்­றன.

ஆனால், போர் ஒன்று நடை­பெ­று­மானால் பாதிக்­கப்­படப் போவது சொந்த நாட்டு மக்­களே. அப­ரி­மி­த­மான இயற்கை வளங்­களைக் கொண்­டி­ருந்தும் ஆபி­ரிக்க நாடு­களில் பெரும்­பா­லான மக்கள் இன்­னமும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்­வ­தற்கே நிர்ப்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பது ஒன்றும் இர­க­சி­ய­மான விடயம் அல்ல. அவ்­வாறு வாழும் மக்கள் மீது போர்கள் திணிக்­கப்­ப­டு­மானால் அவர்­களின் வறுமை நிலை மேலும் அதி­க­ரிக்­கவே செய்யும்.

ஆனால், தமது குடி­யேற்­ற­வாதக் கொள்­கை­களில் இருந்து இன்­னமும் விடு­பட்­டி­ராத முன்னாள் எஜமானர்கள் நினைத்துவிட்டால் போர்கள் உருவாகுவதைத் தடுத்துவிடுவது கடினம்.

சாஹெல் பிராந்தியத்தைப் பொறுத்தவரை அங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு ஆட்சியாளர்கள் தடையாக விளங்குவார்கள் என்ற முடிவுக்கு முன்னாள் குடியேற்ற எஜமானர்கள் வந்துவிட்டால் எந்த வழியிலாவது போரைத் திணித்து விடுவார்கள் என்பதற்கு வரலாறு முழுவதிலும் எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன போன்ற அலங்காரச் சொல்லாடல்களை முன்னிறுத்தி இத்தகைய போர்களை நடத்தக் கூடிய வல்லமை அத்தகைய நாடுகளிடம் தேவைக்கு அதிகமாகவே உண்டு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54