(நெவில் அன்தனி)
இந்தியாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள 13ஆவது ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க, வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீர ஆகியோர் இடம்பெறுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஹசரங்கவின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை இப்போது மேலும் மோசம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் ஹசரங்க இடம்பெறுவது உறுதி இல்லை எனவும் அவர் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக நேரிடும் எனவும் தெரியவருகிறது.
துஷ்மன்த சமீரவும் உபாதையிலிருந்து முழுமையாக மீளாததால் அவர் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அரிதாகவே காணப்படுகிறது.
உபாதை காரணமாக அவர்கள் இருவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவில்லை.
இது இவ்வாறிருக்க, ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது உபாதைக்குள்ளான சுழல்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன, உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் பூரண குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, துஷான் மதுஷன்க ஆகியோரும் உபாதையிலிருந்து மீண்டுள்ளனர்.
ஆனால், அவர்களை எல்லாம் குழாத்தில் இணைத்துக்கொண்டால் அவர்களால் தொடர்ந்து விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழச் செய்கிறது.
இது இவ்வாறிருக்க, இலங்கை அணியினர் நாளைய தினம் இந்தியாவுக்கு பயணமாகவுள்ளனர். ஆனால், இதுவரை உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிக்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM