ரொபட் அன்டனி
- இலங்கையில் தொண்டுசேவையில் ஈடுபடுகின்ற ஒரு அமைப்பு காலநிலை மாற்றம், கல்வி மற்றும் சுகாதார ஆகிய துறைகளுக்கு உட்பட்டு தொண்டுசேவை திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமாயின் அதற்கான விபர திட்டத்தை ஆசிய தொண்டுசேவை கூட்டணிக்கு அனுப்பி ஒத்துழைப்பை பெறலாம். https://philanthropyasiaalliance.org/contact-us என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
சிங்கப்பூரின் தெமாசெக் அறக்கட்டளை நடத்திய ஆசிய தொண்டு சேவை மாநாடு கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் உலகளாவிய ரீதியில் தொண்டு சேவையில் ஈடுபடும் சுமார் 300 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று உலகளாவிய ரீதியில் எவ்வாறு காலநிலை மாற்றம், கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை போன்றவற்றில் மக்களுக்கு தொண்டு சேவைகளை ஆற்ற முடியும் என்பது தொடர்பாக கலந்துரையாடினர். ‘’காலநிலை குறுக்கு வழிகள்: நடவடிக்கைக்கான பாதைகள்’’ என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றது.
சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு சொந்தமான சர்வதேச முதலீட்டு நிறுவனமான தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள தெமாசெக் அறக்கட்டளை, தொண்டுசேவைக்கான அமைப்பாகும். ஆசியாவில் நிலைபேறு மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தொண்டு சேலை திட்டங்களுக்கு இந்த அறக்கட்ளை உதவுகின்றது.
ஆசிய தொண்டுசேவை கூட்டணி
கடந்த 2021 ஆம் ஆண்டு இவ்வாறு தெமாசெக் அறக்கட்டளை தொண்டுசேவை ஆசிய கூட்டணியை உருவாக்கியது. இது அமெரிக்கா, ஆசியா-பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நன்கொடையாளர்கள், அறிவு நிபுணர்கள் மற்றும் கூட்டாளர்களை உள்ளடக்கிய 80 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கொண்ட உலகளாவிய கூட்டணியாக ஆசிய தொண்டுசேவை கூட்டணி காணப்படுகின்றது.
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன்
சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிய தொண்டுசேவை மாநாட்டில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதி இலங்கை வம்சாவளி தமிழர் தர்மன் சண்முகரட்னம் கலந்துகொண்டார். அவரே இந்த அமைப்பின் காப்பாளராகவும் செயற்படுகிறார்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் உரையாற்றிய தெமாசெக் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் லிம் பூன் ஹெங் குறிப்பிடுகையில்
நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களின் அவசரத்தையும் தீவிரத்தையும் நாம் அனைவரும் அறிவோம். இதனை எதிர்கொள்ள துணிச்சலான கூட்டு நடவடிக்கையும் புதுமையும் தேவையாகும். அதனால்தான் நாங்கள் இங்கு ஆசிய தொண்டுசேவை மாநாட்டில் கூடியுள்ளோம். மிகவும் நெகிழ்வான மற்றும் சகலதையும் உள்ளடக்கிய உலகத்திற்கான தீர்வுகளை இணைக்கவும், ஒத்துழைக்கவும் மற்றும் ஊக்கப்படுத்தவும் நடவடிக்கைகள் அவசியமாகும்’’ என்று குறிப்பிட்டார்,.
மனிதநேய வளத்தைக்கொண்டுள்ள ஆசியா
ஆசியாவின் பசுமை மாற்றத்தை துரிதப்படுத்த வேண்டும். இப்பகுதி பருவநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. ஆசியா மனிதநேயத்தின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒரு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை எங்களிடம் உள்ளது. இந்த நிதி பல்வேறு திட்டங்களுக்கு அனுப்பப்படும். காலநிலை, கல்வி, மற்றும் பொது சுகாதாரம் மூன்று ஆரம்ப விடயங்களுக்கு இது பயன்படுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மிக அவசியமான தொண்டுசேவை
இதேவேளை இந்த மாநாட்டில் பங்கேற்ற சமூக சேவை தொண்டு சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமது நாடுகளில் சுகாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செய்து வருகின்ற சேவைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகைகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர். மேலும் பல்வேறு நிபுணர்கள், வர்த்தக பிரமுகர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மனிதாபிமான ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கின்ற உலக மக்களுக்கு சமூக சேவைகளை செய்வதன் அவசியம் தொடர்பில் உரையாற்றினர். முக்கியமாக தற்போதைய சூழலில் இவ்வாறான தொண்டு சேவை செயற்பாடுகள் சமூக சேவை வேலைத்திட்டங்கள் உலகத்துக்கு மிகவும் அவசியமாக இருப்பதாக இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.
‘’நாம் எதிர்கொள்ளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் சிக்கலான சவால்களைச் சமாளிப்பதற்கு கூட்டு, நடவடிக்கை முக்கியமானது. ஆசியாவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பரோபகார மூலதனத்திற்கான வாய்ப்பு மகத்தானது’’ என்று தெமாசெக் அறக்கட்ளை தலைமை நிர்வாக அதிகாரி டெஸ்மண்ட் கோ மாநாட்டில் கூறினார்.
இந்த தொண்டுசேவை ஆசிய மாநாடு மற்றும் கூட்டணி தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரட்னம் தொண்டுசேவை ஆசிய கூட்டணி ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மிகவும் தேவையான முன்முயற்சியாகும். நாம் எதிர்கொள்ளும் சவால் முன்னெப்போதும் இல்லாததாகவுள்ளது. முன்னேற்றமடையும் ஆசியாவில் தொழில் உருவாக்கம் மற்றும் வருமான வளர்ச்சியின் கட்டாயங்களுடன் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க தைரியமான நடவடிக்கைகளின் அவசியத்தை இது இணைக்கிறது. விவசாயம் உட்பட கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும். ஆசிய தொண்டுசேவை கூட்டணி உலகளாவிய மற்றும் பிராந்திய பரோபகாரங்களை ஒன்றிணைத்து, அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து இந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அளவிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நேர்மறை தாக்கம்
தொண்டுசேவை ஆசிய கூட்டணி என்ற வேலைத்திட்டம் ஆசியாவில் பல துறை சார்ந்த கூட்டுறவின் மூலம் கூட்டுப் பரோபகாரத்தை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கூட்டு பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நேர்மறையான மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.
இதனிடையே தெமாசெக் அறக்கட்டளை, தொண்டுசேவைகளுக்கான பொறுப்பாளராகவுள்ளது. நிலைத்தன்மை மற்றும் நேர்மறையான தாக்கத்தின் ஊக்கியாக இது உள்ளது. இது நிர்வாகத்தையும் நிதி மேற்பார்வையையும் வழங்குகிறது. பகிரப்பட்ட நோக்கத்துடன் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் அமைப்புக்கான நன்கொடைகள். பரோபகாரத்திற்கான புதிய பாதைகளை உருவாக்குதல் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் முதலீடு செய்வதை தெமாசெக் அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைப்புக்கள் இணையலாம்
இந்த மாநாட்டில் மேலும் உரையாற்றிய தெமாசெக் அறக்கட்டளையின் பிரதம நிறைவேற்ற அதிகாரி டெஸ்மண்ட் கோ, ‘’ தொண்டுசேவை ஆசிய உச்சி மாநாடு, கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்காக உலகளாவிய மற்றும் பிராந்திய பரோபகாரர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு கூட்டுத் தளமாக செயல்படுகிறது. எங்களிடம் ஏற்கனவே 80 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்கள் உள்ளனர். மேலும் பலர் எங்கள் கூட்டணியில் எங்களுடன் சேர ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். எங்கள் கூட்டாண்மையை வளர்த்து, கூட்டு தாக்கத்தை வடிவமைக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.
கேட்ஸ் பெளண்டேஷன்
உலக செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தலைமை வகிக்கின்ற கேட் பெளண்டேஷன் அமைப்புடனும் இந்த தெமாசெக் அறக்கட்டளை இணைந்து செயல்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் தற்போது பல்வேறு நெருக்கடிகள் சவால்கள் வந்து கொண்டிருக்கின்றன. காலநிலை மாற்றம், வரட்சி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள், காட்டுத்தீ போன்ற நெருக்கடிகள் காணப்படுகின்றன. நாடுகளுக்கு இடையிலான யுத்தம், வர்த்தக நெருக்கடிகள், வர்த்தக சவால்கள், வர்த்தக போட்டிகள், வறுமை, வேலையின்றமை என பல்வேறு நெருக்கடிகளை உலகம் எதிர் கொண்டிருக்கின்றது. இவ்வாறான பின்னணியில் இந்த சவால்களினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு தொண்டு சேவை மிக அவசியமாக இருக்கின்றது.
யுத்தம், காலநிலை மாற்றம், பாதிக்கப்படுகின்ற வறுமை வேலையின்மை போன்றவற்றினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு கொண்டு சேவை ஊடாக உதவி செய்வதற்கான அவசியம் தொடர்ந்து நீடிக்கின்றது. அந்தவகையில் உலகளாவிய ரீதியில் எண்பது தொண்டு சேவை அமைப்புக்கள், நிபுணர்கள், துறை சார் வல்லுநர்களுடன் இணைந்து செயற்படும் ஆசிய தொண்டு சேவை கூட்டணி மற்றும் மாநாடு மிக முக்கியத்துவமாக அமைந்திருக்கின்றது. அது மேலும் ஆசியாவில் இருக்கின்ற நாடுகளின் மக்களுக்கு தொண்டு உதவிகளை தொண்டு முனனெடுக்க வேண்டும் என்பதும் அதில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் இணைந்து செயற்படவேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இலங்கையிலிருந்தும் விண்ணப்பிக்கலாம்
இதேவேளை இலங்கையில் தொண்டுசேவையில் ஈடுபடுகின்ற ஒரு அமைப்பு காலநிலை மாற்றம், கல்வி மற்றும் சுகாதார ஆகிய துறைகளுக்கு உட்பட்டு தொண்டுசேவை திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்த்தால் அல்லது ஏற்கனவே அவ்வாறு முன்னெடுத்தால் அதற்கான விபர திட்டத்தை ஆசிய தொண்டுசேவை கூட்டணிக்கு அனுப்பி ஒத்துழைப்பை பெற முடியும். https://philanthropyasiaalliance.org/contact-us என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM