கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது - கிழக்கு இராணுவ கட்டளையதிகாரி

24 Sep, 2023 | 07:52 PM
image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன இன்று (24) தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மாத்திரமின்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் முதல் நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

தொப்பிகல பகுதியை அண்மித்த ஈரளக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.

தொப்பிகல இராணுவ கட்டளையதிகாரி சந்தன வன்னி நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பாடசாலை மாணவர்கள் 58 பேருக்கு கற்றல் உபகரணங்களும் 50 வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன. 

23ஆம் படைப்பிரிவு தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.

கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

இலங்கை இராணுவ படையினர் தற்பொது பொதுமக்களின் பாதுகாப்பை மட்டுமன்றி பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் இளைஞர்களின்  விளையாட்டுத்துறையினையும் மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இத்திட்டம் கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42
news-image

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு...

2023-12-06 19:49:32
news-image

மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக...

2023-12-06 19:52:54
news-image

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : 3...

2023-12-06 19:55:54
news-image

இறந்த நிலையில் மூன்று கடலாமைகள் மீட்பு

2023-12-06 20:22:08
news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51