மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் : 168 வீடுகளில் பரிசோதனை : 47 கிணறுகளில் டெங்கு குடம்பிகளை உண்ணும் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

24 Sep, 2023 | 05:35 PM
image

ரீ.எல். ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை பெய்ய ஆரம்பித்திருப்பதால் டெங்கு நோய் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் லதாகரனின் வழிகாட்டலில் இன்று (24) காலை கோட்டைமுனை பிரதேசத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது ஆறு பிரிவுகளாக சுகாதார பகுதியினர் பிரிக்கப்பட்டு 168 வீடுகளில் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதேவேளை 47 கிணறுகளில் டெங்கு குடம்பிகளை உண்ணுகின்ற மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

கோட்டைமுனை சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ்  தலைமையில் சுகாதார பரிசோதகர்கள், மாநகர சபை ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இப்பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்திருந்தனர்.

டெங்கு பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், தேவையற்ற பொருட்கள் மட்டக்களப்பு மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களினால் அகற்றப்பட்டன.

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் பங்குகொண்டனர் என்பதை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40
news-image

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு...

2023-12-06 15:44:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-06 15:35:11
news-image

எட்கா குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு...

2023-12-06 16:49:08
news-image

கடுகண்ணாவ வைத்தியசாலையில் சுவரொன்று வீழ்ந்து பணியாளர்...

2023-12-06 15:18:09
news-image

கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கையில் கையெழுத்திட...

2023-12-06 15:09:10
news-image

நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன்...

2023-12-06 16:48:26