பிரிட்னி மார்டில்
ஓர் புதிய பொருளாதார முன்னுதாரணம்: ஆப்பிரிக்க சக்திகள் எழுச்சி பெறுகின்றன
ஆப்பிரிக்காவிற்குள் புதிய பொருளாதார சக்திகள் தோன்றுவது சமீப காலங்களில் ஒரு அதிசயமான நிகழ்வாக உள்ளது. இந்த வளர்ந்து வரும் ஆப்பிரிக்க அதிகார சக்திகள் கண்டத்தின் பொருளாதாரத்தை வடிவமைப்பதிலும், நிறுவப்பட்ட நெறிமுறைகளுக்கு சவால் விடுவதிலும், நிலைமாற்ற அபிவிருத்தியை முன்னெடுப்பதிலும் அதிகரித்தளவில் முக்கியமான வகிபாகத்தை கொண்டுள்ளன.
நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, கென்யா மற்றும் எதியோப்பியா போன்ற வளர்ந்து வரும் சக்திகள், எகிப்து போன்ற மற்ற முக்கிய தரப்பினருடன் இணைந்து ஆப்பிரிக்காவின் பாதையில் இந்த மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நாடுகள் பிராந்திய தலைவர்களாக தங்களது வகிபாகத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், உலக அரங்கில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்துகின்றன. இந்த முன்னுதாரணமான மாற்றமானது பாரம்பரியமாக மேலை நாடுகளை அபிவிருத்தி முயற்சிகளில் முன்னணியில் நிலைறுத்துகின்ற நடைமுறையில் உள்ள கதைசுருக்கங்களை கேள்விக்குள்ளாக்குகிறது.
ஆபிரிக்காவின் வளர்ந்து வரும் அதிகார சக்திகளின் முக்கிய அடையாளம் வர்த்தகம் மற்றும் பொருளாதார பங்காண்மைகளில் அவர்களின் முன்னேற்பாடான ஈடுபாடு ஆகும்.
இந்த நாடுகள் தங்கள் வர்த்தக பங்காண்மைகளை விரிவுபடுத்துவதன் மூலமாக மேற்கத்திய சந்தைகளில் தங்களுடைய கடந்தகால நம்பிக்கையை குறைக்கின்றன. இது பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பிற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடனான ஒத்துழைப்பை ஆராய்வதற்கு ஆப்பிரிக்க நாடுகளை சாதகமாக்குகிறது.
பல தசாப்தங்களாக, பல ஆபிரிக்கப் பொருளாதாரங்கள் தங்கள் ஏற்றுமதிக்காக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான மேற்கத்திய சந்தைகளையே பெரிதும் நம்பியிருந்தன. ஒரு சில வர்த்தகப் பங்காளர்களைச் சார்ந்திருப்பதானது, உலகளாவிய கேள்வி மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு இந்த நாடுகள் பாதிக்கப்படுவதற்கு ஆளாக்குவது மட்டுமல்லாமல், சாதகமான வர்த்தக நியதிக்கான பேச்சுவார்த்தைக்கு அவர்களின் இயலளவையும் கூட தடுக்கின்றது.
ஆனால் ஆபிரிக்க வளர்ந்து வரும் நாடுகளின் தோற்றம் நிறுவப்பட்ட நிலையில் இருந்து ஓர் மாற்றத்தைக் குறிக்கிறது. நிறுவப்பட்ட மேற்கத்திய சந்தைகளுக்கு அப்பால் தங்கள் ஏற்றுமதி சந்தைகளின் அகலத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆப்பிரிக்க நாடுகள் இப்போது தங்களின் பொருளாதார ஈடுபாடுகளை முனைப்பாக விரிவுபடுத்துகின்றன.
அவ்வாறு செய்வதன் மூலமாக, எந்தவொரு தனியான சந்தையிலிருந்துமான பொருளாதார அதிர்ச்சிகளுக்கு அவர்கள் இலகுவில் பாதிக்கப்படுவதைக் இழிவாக்குவது மட்டுமல்லாமல், புதிய பொருளாதார வாய்ப்புகளுக்கான இயலளவையும் திறக்கிறார்கள். இந்த மூலோபாய பல்வகைப்படுத்தலானது சமநிலைப்படுத்தப்பட்ட வர்த்தக அமைப்பின் வெளிப்புற பாதிப்புகளுக்கு எதிரான ஓர் பாதுகாப்பு என்ற உணர்தலுக்கான பதிலளிப்பாகும்.
உட்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் செலவீனங்கள் தனிமைப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; மாறாக, அவை இந்த நாடுகளின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் மற்றும் அதிகரித்த ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒட்டுமொத்த திட்டங்களின் ஓர் அங்கமாகும்.
வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகள், நகர்ப்புற-கிராம வேறுபாட்டைக் குறைப்பதுடன் உள்ளக இணைப்புகளை மேம்படுத்துவதன் மூலமாக முன்னர் குறை அபிவிருத்தியடைந்த பிராந்தியங்களின் பொருளாதார இயலளவை திறக்கின்றன. உட்கட்டமைப்பின் இந்த நியாயமான ஒதுக்கீடு சமத்துவமின்மையை நீக்குகின்ற அதே நேரத்தில் நாட்டின் திரட்டப்பட்ட மனித மூலதனத்தையும் பயன்படுத்துகிறது.
இந்த உட்கட்டமைப்பு முயற்சிகள் பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக, மேம்படுத்தப்பட்ட வீதி மற்றும் புகையிரத வலையமைப்புகள், கண்டங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் வர்த்தகத்தையும் ஊக்குவிக்கும் வகையில், பண்டங்களை எல்லைகளுக்கப்பால் கொண்டு செல்வதை வசதிப்படுத்துகின்றது.
பல நாடுகளை ஒன்றிணைக்கும் பொருளாதார வழித்தடங்கள் உருவாகி வருவதுடன், அவை வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன் அரசுகளிடையே இடையே பொதுவான விதியின் உணர்வை வளர்க்கும் அதே நேரத்தில் ஒவ்வொன்றினதும் தனித்துவமான சொத்துக்கள் மற்றும் நன்மைகளைப் பயன்படுத்துகின்றன.
கடந்த பாரம்பரிய அபிவிருத்தி நிலைகளை முன்னேற்ற, வளர்ந்து வரும் ஆப்பிரிக்க சக்திகள் தொழில்நுட்ப கண்டறிவுகளை பின்பற்றி வருகின்றன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு விருத்தியின் உதவியுடன், இந்த நாடுகள் நிர்வாகத்தை இலகுவாக்குவதற்கும், தேவையான சேவைகளை வழங்குவதற்கும் மற்றும் தொழில்முனைவோரை வளர்ப்பதற்கும் டிஜிட்டல்மயமாக்கலை ஏற்றுக்கொள்கின்றன.
இந்த அணுகுமுறை வினைத்திறன் மற்றும் விளைதிறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஆப்பிரிக்காவை டிஜிட்டல் பொருளாதாரத்தில் முனைப்பான போட்டியாளராக உலக அரங்கில் செலுத்துகிறது. அபிவிருத்திக்கான பாரம்பரிய அணுகுமுறைகள் பெரும்பாலும் கைத்தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார விரிவாக்கத்தின் வெவ்வேறு நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு நேரிய பாதையை பின்பற்றுவதை உள்ளடக்கியது.
எவ்வாறாயினும், வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகள் இந்த முன்னுதாரணத்தை ஓர் பாய்ச்சல் அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலமாக மேம்படுத்துகின்றன. பாய்ச்சல் அணுகுமுறை என்பது சில நாடுகள் சில அபிவிருத்தி நிலைகளைக் கடக்காமல் மிக சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பின்பற்றும் நடைமுறையாகும்.
அவர்கள் அபிவிருத்தியை விரைவுபடுத்தலாம் என்பதுடன் இதனை மேற்கொள்வதன் மூலம் மிகவும் அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்கள் சந்திக்கும் தடைகளைச் சமாளிக்க முடியும். ஆப்பிரிக்க நாடுகள் இந்த மூலோபாய கட்டாயத்தை தங்களின் சமீபத்தைய நன்மைகளைப் பயன்படுத்தி ஈடுசெய்கின்றன.
காலம்கடந்த உட்கட்டமைப்புகளால் சுமையாக இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் புத்தாக்கம் மற்றும் அபிவிருத்தியின் முன்னணியில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு, அதிநவீன தொழில்நுட்பங்களைத் தழுவிக்கொள்ள முடியும்.
ஆசிய பிராந்தியங்களில் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க சக்திகளின் தாக்கம்: ஒத்துழைப்பின் புதிய முன்னுதாரணம்
உலக அரங்கில் செல்வாக்குமிக்க தரப்பினராக ஆபிரிக்க சக்திகளின் தோற்றமானது அவர்களின் கண்டத்தை நிலைமாற்றுவது மட்டுமல்லாமல், ஆசிய பிராந்தியங்கள் முழுவதும் தாக்கத்தின் அலைகளை செலுத்துகின்றது.
ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த கூட்டுறவின் மூலமாக ஒத்துழைப்பு, படைப்பாற்றல் மற்றும் பொருளாதார செழிப்பு ஆகியவற்றின் புதிய சகாப்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் ஆப்பிரிக்க சக்திகள் ஆசிய நாடுகளுடன் மூலோபாய பங்காண்மைகளை உருவாக்குவதால், வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தியின் பரிமாணம் மீள்வரையறை செய்யப்பட்டு, இரண்டு பிராந்தியங்களுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் சாதகமான வாக்குறுதியைக் கொண்டுள்ள தோற்றவியலை உருவாக்குகின்றது.
ஆப்பிரிக்க வளரும் சக்திகள் பல்வேறுபட்ட பொருளாதார ஈடுபாடுகளை நாடுவதால், ஆசியாவின் முனைப்பான பொருளாதாரங்களில் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளன. இந்த விரிவாக்கமானது வழக்கமான தடைகளைத் தாண்டிய ஒத்துழைப்புக்கான ஓர் புதுமையான முன்னுதாரணத்தை ஆரம்பிக்கின்றது.
சீனா மற்றும் இந்தியாவிலிருந்து துருக்கி மற்றும் இந்தோனேசியா வரை ஆசியாவின் தொழில்நுட்ப வலிமை, சந்தை அணுகல் மற்றும் முதலீட்டு சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆப்பிரிக்க நாடுகள் முயற்சிக்கின்றன. ஒவ்வொரு பிராந்தியத்தின் பலன்களையும் பயன்படுத்திக் கொள்ளுகின்ற கண்டங்களுக்கு இடையேயான பங்காண்மைகளின் சிக்கலான வலையமைப்பே இறுதியான முடிவாகும்.
⦁ வர்த்தகம் மற்றும் முதலீட்டு பரிமாணம்
ஆசிய பிராந்தியங்களுக்கும் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வருகின்ற பொருளாதார இணைப்புகளால் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான சூழல் மீள்வரையறை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கப் பொருளாதாரங்கள் தங்களின் ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவதுடன் ஆசியாவின் செழிப்பான சந்தைகளுடன் இணைப்பதால் தங்களுடைய பொருட்கள் மற்றும் பெறுமதிசேர்க்கப்பட்ட உற்பத்திகளை வரவேற்கின்ற வாடிக்கையாளர்களைக் கண்டறிகின்றன. ஆப்பிரிக்க பொருளாதாரங்கள் தங்கள் ஏற்றுமதி சந்தைகளை பல்வகைப்படுத்துவதால், நைஜீரியா போன்ற நாடுகள் சீனா மற்றும் இந்தியா போன்ற ஆசிய வல்லரசுகளுடன் வர்த்தக தொடர்புகளை நிறுவுகின்றன. பதிலுக்கு, ஆசிய நாடுகள் ஆப்பிரிக்காவின் பரந்த இயற்கை வளங்களை அங்கீகரிப்பதுடன், புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற துறைகளில் முதலீடு செய்கின்றன. புவிவெப்ப சக்தி செயற்திட்டங்களை மேம்படுத்துவதில் ஜப்பானுடனான கென்யாவின் ஒத்துழைப்பானது, நிலையான சக்திமுதல் தீர்வுகள் மற்றும் பரஸ்பர பொருளாதார ஆதாயங்களுக்கு வழிவகுத்த ஓர் உதாரணமாகும்.
⦁ பரஸ்பர கற்றல் மற்றும் முன்னேற்றம்
நிபுணத்துவம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் பரஸ்பர பரிமாற்றமானது அபிவிருத்தியடைந்து வரும் ஆப்பிரிக்க சக்திகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையிலான உறவை வகைப்படுத்துகின்றது. உதாரணமாக, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் ஆளுகை தொடர்பான ருவாண்டா மற்றும் சிங்கப்பூரின் ஒத்துழைப்பு நிலைத்து நிற்கின்ற மற்றும் வினைத்திறனான நகரங்களின் அபிவிருத்திக்கு உதவியது. நிபுணத்துவம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் பரஸ்பர பரிமாற்றமானது அபிவிருத்தியடைந்து வரும் ஆப்பிரிக்க சக்திகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையிலான உறவை வகைப்படுத்துகின்றது. உதாரணமாக, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் ஆளுகை தொடர்பான ருவாண்டா மற்றும் சிங்கப்பூரின் ஒத்துழைப்பு நிலைத்து நிற்கின்ற மற்றும் வினைத்திறனான நகரங்களின் அபிவிருத்திக்கு உதவியது.
⦁ தொழில்நுட்ப பாய்ச்சல் மற்றும் புத்தாக்க பரிமாற்றம்
ஆசிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அபிவிருத்தியடைந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளால் தங்களது சொந்த முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறன. நிதியியல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் வர்த்தகம் போன்ற துறைகளில் ஆசிய நாடுகளின் நிபுணத்துவமானது, வழக்கமான வளர்ச்சியின் நிலைகளைத் தவிர்ப்பதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவுகிறது. கைத்தொலைபேசி மூலமான வங்கியியல் மற்றும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறைமைகளைப் பயன்படுத்தி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறையுடனான நைஜீரியாவின் உறவு, பிந்தைய டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவித்ததுடன் நிதி உள்ளடங்கல் மற்றும் பொருளாதார விருத்தியை இயைபாக்குகின்றது.
முடிவுரை
ஆப்பிரிக்காவின் வளர்ச்சியடைகின்ற சக்திகளின் முன்னேற்றமானது கண்டத்திலும் ஆசியாவிலும் ஒரு வியத்தகு மாற்றத்தைத் தூண்டியுள்ளதுடன், இது முனைப்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சியால் செறிவூட்டப்பட்ட ஓர் காலகட்டத்திற்கு வழிவகுத்தது. ஆப்பிரிக்க நாடுகளின் ஆசியப் பொருளாதாரங்களை நோக்கிய விரிவாக்கமானது வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் அபிவிருத்தி உத்திகளை உள்ளடக்கிய ஒரு முன்னுதாரண மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் ருவாண்டா உட்பட பல்வேறு நாடுகள் தென் கொரியா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற ஆசிய வல்லரசுகளுடன் ஒத்துழைக்கின்ற ஆசிய - ஆப்பிரிக்க சக்திகளின் தொடர்புகளின் பரந்த எல்லைகள் பாரம்பரிய கூட்டணிகளிலிருந்தான முறிவைக் குறிக்கின்றன. வர்த்தக புள்ளிவிவரங்களுக்கு அப்பால், இந்த பங்காண்மைகள் பகிரப்பட்ட அபிவிருத்தி பிரச்சினைகள் மற்றும் குறிக்கோள்கள் தொடர்பான ஆழமான புரிதலை உருவாக்குகின்றன.
ஆப்பிரிக்காவின் செல்வாக்குமிக்க தரப்பினரின் தோற்றம், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் அபிவிருத்தி தோற்றவியலை மீள்வரையறை செய்கின்ற கண்டங்களை தாண்டிய ஒத்துழைப்புகளைத் தூண்டுவதன் மூலமாக, நிலைமாற்ற ஒத்துழைப்பின் சகாப்தத்திற்கு வழிவகுத்தது. இந்த பரிமாணமானது தொடர்ச்சியாக மாற்றமடைவதால் ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான ஒன்றிணைந்த இணைப்பு, பரஸ்பர முன்னேற்றம் மற்றும் உலகளாவிய பொருத்தப்பாடுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
பிரிட்னி மார்டில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஆவார். அவர் நீதி மற்றும் சமத்துவத்திற்கான ஆர்வத்துடன், அனைத்து வகையான அநீதிகளுக்கும் எதிராக போராடுவதில் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் இருக்கிறார்.
Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.
இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM