குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு அலகுகள் குறித்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது.
அடுத்த மாதம் சீனாவின் பீஜிங்கில் நடைபெறும் "Belt and Road Initiative" (BRI) உச்சிமாநாட்டின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று அமைச்சும் கூறியது.
1996 வீட்டு அலகுகளில் இந்நாட்டின் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 108 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பழதுறு வத்த பகுதியில் வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1888 வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடமைப்புத் திட்டத்துக்காக சீன அரசாங்கம் இலங்கைக்கு 552 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கவுள்ளது.
இங்கு இத்திட்டத்துக்காக செலவிடப்படும் வரிப்பணம், காணி சுவீகரிப்புக்கான செலவு, காணி அபிவிருத்திக்கான செலவு, வடிவமைப்பு வேலைக்கான செலவு மற்றும் அடிப்படை விலைப்பட்டியல் தயாரிப்பதற்கான செலவு, டெண்டர் பணிக்கான செலவு மற்றும் கழிவுநீர் வசதிகளின் செலவு என்பன இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பான பரிமாற்றக் கடிதத்தில் சீன மக்கள் குடியரசும் இலங்கை அரசும் கடந்த ஜனவரி 9ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் குறைந்த வசதிகள் கொண்ட குடியிருப்புகளில் வசிப்பவர்களின் குடியேற்றப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM