சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை குறித்த முக்கிய புலனாய்வு தகவல்களை அமெரிக்காவே கனடாவிற்கு வழங்கியது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சீக்கியர் படுகொலை குறித்த தகவல்களை கனடாவிற்கு வழங்கியது ஆனால் கனடா தொலைதொடர்பு தகவல்களை இடைமறித்தவேளை அதற்கு மேலும் வலுவான ஆதாரங்கள் கிடைத்தன அதன் பின்னரே இந்தியாவிற்கு எதிராக கனடா உறுதியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது என நியுயோர்க் டைம்ஸ்தெரிவித்துள்ளது.
சீக்கியரின் கொலையை தொடர்ந்து கனடாவின் அமெரிக்க சகாக்கள் கொலைக்கான சூழமைவினை வழங்கினார்கள் அதன் மூலம்இந்தியாவின் தொடர்புகுறித்து தீர்க்கமான முடிவிற்கு கனடா வந்தது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயோர்க் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை கனடா தனது நாட்டில் உள்ள இந்திய இராஜதந்திரிகளின் புலனாய்வு தகவல்களை இடைமறித்தவேளையே இந்தியாவே படுகொலையின் பின்னணியில் உள்ளது என்ற முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன எனவும் நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM