எமது கோரிக்­கைகள் தொடர்­பில் தீர்வு வழங்க அர­சாங்­கத்­திற்கு ஒரு வார கால காலக்­கெடு வழங்­கி­யுள்ளோம். இக்காலப் பகுதியில் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வு கிடைக்­கா­விட்டால் நாட­ளா­விய ரீதியில் தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப் போம் என்று அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் எச்­ச­ரித்­துள்­ளது.

நூற்­றுக்கும் மேற்­பட்ட தொழிற்­சங்க உறுப்­பி­னர்­களின் முன்­னி­லையில் நேற்று இடம்­பெற்ற மத்­திய செயற்­குழுக் கூட்­டத்தில் இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தா­கவும்

அந்த சங்கம் தெரி­வித்­துள்­ளது.

தொழில்சார் நிபு­ணர்கள் அமைப்பின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே சங்கம் இந்த அறிவிப்பை வெ ளியிட்டது.

இதன்­போது அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் பேச்­சாளர் வைத்­தியர் நவீன் டி. சொய்சா மேலும் கூறு­கையில்,

தேசிய அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்ட வரவு செலவு திட்­டத்தில் அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­ப­டாமை, வரி சலுகை­யுடன் கூடிய வாகன அனு­ம­திப்­பத்­திரம் நீக்­கப்­பட்­டமை, அரச சேவை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டு­வந்த பல வரப்­பி­ர­சா­தங்­களை நீக்­கப்­பட்­டமை மற்றும் மாலபே தனியார் வைத்­திய கல்­லூரி செயற்­பா­டுகள் உள்­ளிட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­ப­டாமை தொடர்பில் பல­முறை அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­தி­ருந்தோம்.

இத­ன­டிப்ப்­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடம் இரண்டு முறையும், சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன விடம் மூன்று தட­வை­களும், சர்­வ­தேச வர்த்­தக விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் மலிக் சம­ர­விக்­ர­ம­வுடன் இரண்டு தட­வை­களும் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டி­ருந்தோம். இருந்த போதிலும் எங்­க­ளுக்­கான கோரிக்­கை

கள் தொடர்பில் எவ்­வி­த­மான இறுதி தீர்­மா­னங்­களும் எடுக்கப்படவில்லை.

மேற்­கு­றிப்­பிட்ட கோரிக்­கைகள் 2005 ஆம் ஆண்­டி­லி­ருந்தே முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன. மேலும் அரச நிய­மப்­படி ஒரு ஆண்டில் 1.45 சத­வீதம் சம்­பள அதி­க­ரிப்பு அரச சேவை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். இருப்­பினும் கூட அந்த சம்­பள அதி­க­ரிப்­புக்கள் இது­வ­ரைக்­கா­லமும் வழங்­கப்­டா­மை­யி­னா­லேயே நாம் தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.

இந்­நி­லையில் தேசிய அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்ட வரவு செல­வுத்­திட்டம் கடந்த பத்­தொன்­பதாம் திகதி பெரும்­பான்மை வாக்­கு­களால் நிறை­வேற்­றப்பட் பின்னர் எமது கோரிக்­கைகள் தொடர்­பிலோ பேச்­சு­வார்த்தை தொடர்­பிலோ இது­வ­ரை­யிலும் உடன்­பாட்­டிற்கு வரா­ம­லி­ருப்­பது எம்­மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தொடர்ந்தும் எமது கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் தேசிய அர­சாங்­கத்­திற்கு காலக்­கெ­டுவும் விடுத்­தி­ருந்தோம் .இவ்­வாறு சகல வழி­க­ளிலும் எமது கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்த போதிலும் அர­சாங்கம் அவற்றை புறக்­க­ணித்­துள்­ளது. இந்த பிரச்­சி­னையை நாட்­டி­லுள்ள பல அரச தொழிற்­சங்­க­ளு­களும் எதிர்­நோக்­கி­யுள்­ளன என்றார்.