டீமன்- திரை விமர்சனம்

23 Sep, 2023 | 04:21 PM
image

தயாரிப்பு : விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ்

நடிகர்கள் : சச்சின், அபர்னதி, கும்கி அஸ்வின் ஸ்ருதி பெரியசாமி, மற்றும் பலர்.

இயக்கம் : ரமேஷ் பழனிவேல்

மதிப்பீடு : 2/5

அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பேய் பட ட்ரெண்டை நம்பி மீண்டும் ஹாரர் கதை ஒன்றை 'டீமன்' எனும் பெயரில் இயக்கி இருக்கிறார். இது பார்வையாளர்களை பயமுறுத்தியதா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.

திரைத் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றும் கதையின் நாயகனான சச்சின்- தயாரிப்பாளர் ஒருவரிடம் ஹாரர் கதை ஒன்றை சொல்லி, அப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுகிறார். உற்சாகமடைந்த சச்சின் படத்தின் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்வதற்காக தனியாக ஒரு வீட்டை எடுத்து தங்குகிறார். அந்த வீட்டில் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனால் அச்சமடையும் சச்சின் தன்னுடைய  திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தழுவி இப்படத்தின் கதையை இயக்குநர் எழுதி இருக்கிறார். கதை கருவை நேர்த்தியாக தெரிவு செய்த இயக்குநர்... அதற்கான திரைகதையை வலுவாக அமைப்பதிலும், கதாபாத்திரங்களை பொருத்தமாக தெரிவு செய்வதிலும் கவனத்தை செலுத்தவில்லை. இதனால் அச்சப்பட வேண்டிய தருணங்கள் குறைவாகவும்... எரிச்சல் ஊட்டும் தருணங்கள் அதிகமாகவும் இருக்கிறது.

முதல் பாதி திரைக்கதையிலும், இரண்டாம் பாதி திரை கதையிலும் இருக்க வேண்டிய பரபரப்பு மிஸ்ஸிங். இப்படத்தில் இடம்பெறும் சம்பவங்கள்.. ஏற்கனவே வெளியான பிறமொழி திரைப்படங்கள், இணைய தொடர்கள் என ஏராளமான படைப்புகளை நினைவுபடுத்துகிறது.

குறிப்பாக நாயகன் தங்கும் வீட்டில் உள்ள பேய்கள்... நாயகனை உடனடியாக கொல்லாமல் சமரசம் அடைவது ஏன்? என்பது விளக்கப்படவில்லை. இது திரைக்கதையின் பலவீனத்தை அப்பட்டமாக உணர்த்துகிறது.

நடிகர் சச்சின், இயக்குநர் எதிர்பார்த்த நடிப்பை குறைவில்லாமல் வழங்கி இருக்கிறார். நாயகி அபர்னதி பாடலுக்காகவும், பொழுது போக்காகவும் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு உயர்தரம். பின்னணி இசை மற்றும் பாடல்கள் பரவாயில்லை.‌

டீமன்- அச்சப்படுத்தாத பேய்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் வாள் வெட்டு ; நால்வர்...

2025-06-15 16:26:23
news-image

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மு.கா....

2025-06-15 16:14:01
news-image

டயகம பிரதேச வைத்தியசாலையில் அடிப்படை வசதிகளை...

2025-06-15 16:06:15
news-image

கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

2025-06-15 15:49:46
news-image

ராகமவில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர்...

2025-06-15 16:17:44
news-image

ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40...

2025-06-15 14:29:11
news-image

தலைமைத்துவங்களும், மக்களும் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க...

2025-06-15 14:15:50
news-image

நாட்டின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

2025-06-15 14:03:20
news-image

கண்டி – பேராதனை இடையிலான புகையிரத...

2025-06-15 13:43:03
news-image

பஸ் - லொறி மோதி விபத்து...

2025-06-15 13:32:20
news-image

வீதி விபத்துகளை தடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்...

2025-06-15 12:25:23
news-image

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட...

2025-06-15 12:59:43