சீயான் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

23 Sep, 2023 | 03:42 PM
image

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருந்த 'துருவ நட்சத்திரம்' எனும் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இதில் சீயான் விக்ரம், ரித்து வர்மா, ஆர். பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரஹாம்சா, எஸ். ஆர். கதிர் மற்றும் விஷ்ணு தேவ் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். புலனாய்வு அதிகாரிகளின் வாழ்வியலை மையப்படுத்தி திரில்லர் மற்றும் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒன்றாக் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்திருக்கிறார் ப்ரீத்தி ஸ்ரீ விஜயன் படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

2017 ஆம் ஆண்டில் இப்படத்தின் டீசர் வெளியானது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற சில பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் பாரிய வரவேற்பை பெற்றிருந்தது. நீண்ட நாளாக எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, தணிக்கை சான்றிதழும் பெறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு திகதியை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - வெர்ஸட்டைல் ஆக்டர் விக்ரம் இணைந்திருப்பதாலும், வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டிருப்பதாலும், இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தியத்தலாவ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக...

2024-04-21 18:26:47
news-image

நாட்டை கட்டியெழுப்புகையில் யாரையும் கடந்து செல்லவோ...

2024-04-21 17:41:42
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா...

2024-04-21 17:38:24
news-image

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21...

2024-04-21 16:12:10
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்...

2024-04-21 16:08:07
news-image

நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள...

2024-04-21 17:06:14
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஆறு தோட்டத்தொழிலாளர்கள்...

2024-04-21 16:27:04
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39