மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி சிகிச்சை

23 Sep, 2023 | 03:38 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் பாடசாலை தவிர்த்த பெரும்பாலான தருணங்களில் இலத்திரனியல் சாதனங்களுடன் தான் தங்களுடைய பொழுதை கழிக்கின்றனர். அந்த சாதனங்கள் வாழ்க்கைக்கு தேவையில்லாத... அவசியமற்ற.. பல விடயங்களை முன்மொழிந்து, வசப்படுத்தி, உங்களது மதிப்பு மிக்க நேரத்தை வீணடிப்பதுடன், உங்களை மன அழுத்தத்திற்கும் ஆளாக்குகிறது. 

இளைய தலைமுறையினர் மட்டுமல்லாமல் பதின் வயதினரும் தங்களுக்கென பிரத்யேக நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளாமலும், உருவாக்கிக் கொண்ட நட்பு வட்டத்திற்கு போதிய அளவு முக்கியத்துவம் தராமலும், குடும்ப உறுப்பினர்களிடமும், பெற்றோர்களிடமும்... தங்கள் மனதில் நினைத்ததை பகிர்ந்து கொள்ளாமல்.. தங்களை தாங்களே சிறை வைத்து கொண்டு, மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு கவுன்சிலிங் எனப்படும் டாக்கிங் தெரபி என்ற உளவியல் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அளித்து, அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பாடசாலையில் பயிலும் பதின்ம வயதினர் முதல் பணியில் இருக்கும் இளம் பெண்கள் வரை இன்றைய திகதியில் இவர்கள் நாளாந்தம் இலத்திரனியல் சாதனங்களுடன் குறைந்தது ஐந்து மணித்தியாலத்திலிருந்து, பன்னிரண்டு மணி த்தியாலம் வரை பொழுதை கழிக்கிறார்கள். இதனால் கண் வறட்சி, மன அழுத்தம், தனித்திருத்தல், தனிமைப்படுத்திக் கொள்ளல், மற்றவர்களுடன் பழகாதிருத்தல், மற்றவர்களுடன் பேசாதிருத்தல், மற்றவர்களுடன் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல்... போன்ற செயல்களை தொடர்ச்சியாக செய்து, மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்களுக்கு உளவியல் நிபுணர்கள் டாக்கிங் தெரபி எனப்படும் அவர்களுடைய எண்ணங்களை தொடர்ந்து வெளிப்படுத்தி, அதை பற்றிய கருத்தியலை உருவாக்கி.. அதனை நேரில் நிலையான எண்ண அலைகளாக மாற்றி, அவர்களின் மன அழுத்தத்திற்கு நிவாரணம் அளிக்கிறார்கள்.

அத்துடன் 'இந்த நிமிடம் உண்மையானது. இந்த நிமிடம் எனக்கானது. இந்த நிமிடத்தில் நான் செய்யும் பணி எமக்கு மன நிறைவை அளிக்கிறது' என்ற பிரத்யேக பயிற்சியை அவர்களுக்கு வழங்குகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைப்பதுடன், இதன் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து, அவர்களையும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பாதுகாக்கிறார்கள்.

டொக்டர் வேணி
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்காலிக சிறுநீரக பாதிப்புக்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-12-04 17:39:54
news-image

சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பை சீரமைக்கும் நவீன...

2024-12-03 16:32:15
news-image

தைரொய்ட் கட்டி பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-12-02 17:14:34
news-image

கிளியோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் எனும் புற்றுநோய் பாதிப்பிற்கு...

2024-11-29 17:49:15
news-image

தோலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்...

2024-11-28 18:26:24
news-image

முழங்கால் மூட்டு காயத்தை விரைவாக நிவாரணம்...

2024-11-27 15:58:05
news-image

ரேடியல் நரம்பு வாத பாதிப்பிற்குரிய நவீன...

2024-11-26 18:17:04
news-image

ஹீமோடயாபில்ட்ரேசன் - சிறுநீரக நோயாளிகளுக்கான நவீன...

2024-11-25 19:16:34
news-image

புற்றுநோய் பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-11-20 18:30:48
news-image

பக்கவாத பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-11-18 16:30:21
news-image

குருதி புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-11-16 16:34:33
news-image

நீரிழிவு நோயால் பாதம் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை...

2024-11-15 16:10:38