தளபதி விஜயின் 'லியோ' பட அப்டேட்

23 Sep, 2023 | 04:21 PM
image

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய பதிப்புகளின் பிரத்யேக போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர், தற்போது இந்த திரைப்படம் இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஐமேக்ஸ் எனப்படும் அகன்ற திரைகளிலும் வெளியாகிறது என தெரிவித்துள்ளனர். இதனால் அகன்ற திரைகளில் உன்னதமான படைப்பை கண்டு ரசிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளதால்... அவர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இந்திய திரையுலகில் மட்டுமல்லாமல் உலகளவில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் ஐமேக்ஸ் எனப்படும் அகன்ற திரையில் திரையிடப்படுவது மரபு. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'லியோ' திரைப்படமும் ஐ மேக்ஸ் திரையில் வெளியாகிறது.

இந்தியாவில் மட்டும் 25க்கும் மேற்பட்ட ஐமேக்ஸ் அகன்ற திரைகளில் விஜயின் 'லியோ' திரையிடப்படுகிறது. இந்தியா தவிர்த்து இங்கிலாந்து, ஜேர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விஜயின் 'லியோ' திரைப்படம் ஐமேக்ஸ் எனும் அகன்ற திரைகளில் திரையிடப்படுகிறது.‌

இதனிடையே இம்மாத இறுதியில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இப்படத்தில் இசை வெளியீடு ரசிகர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது என்பதும், இதன் போது தளபதி விஜய் குட்டிக்கதை மூலம் ரஜினியின் 'காக்கா' விமர்சனத்திற்கு நேர் நிலையான பதிலை வழங்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right