ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர் அபார துடுப்பாட்டங்கள் ; ஆஸி.யை 5 விக்கெட்களால் வென்றது இந்தியா

23 Sep, 2023 | 10:53 AM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொஹமத் ஷமியின் 5 விக்கெட் குவியல், ருத்துராஜ் குஜராத், ஷுப்மான் கில், கே.எல். ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோரின் அபார அரைச் சதங்கள் என்பன இந்தியாவுக்கு 5 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு 13 நாட்களே உள்ள நிலையில் இந்தியாவுக்கு இந்த வெற்றி பெரு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் கொஹ்லி, ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதுடன் கே. எல். ராகுல் அணித் தலைவராக விளையாடினார்.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 277 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா சவாலுக்கு மத்தியில் 48.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ருத்துராஜ் கய்க்வாட், ஷுப்மான் கில் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 21.4 ஓவர்களில் 142 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும் ருத்துராஜ் கய்க்வாட் (71), ஷ்ரேயாஸ் ஐயர் (3), ஷுப்மான் கில் (74), இஷான் கிஷான் (18) ஆகிய நால்வரும் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் களம் விட்டகன்றனர். (185 - 4 விக்.)

தொடர்ந்து கே.எல். ராகுல் (58 ஆ.இ.), சூரியகுமார் யாதவ் (50) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க இந்தியாவுக்கு உதவினர். (265 - 5 விக்.)

அதன் பின்னர் ராகுலும் ரவீந்த்ர ஜடேஜாவும் (3 ஆ.இ) வெற்றி இலக்கைக் கடக்க உதவினர்.

பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் மிச்செல் மார்ஷ் (4) குறைந்த எண்ணிக்கையுடன் ஆட்டம் இழந்தது அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

ஆனால், டேவிட் வோர்னர் (52), ஸ்டீவன் ஸ்மித் (41), மார்னுஸ் லபுச்சான் (39), கெமரன் க்றீன் (31), ஜொஷ் இங்லிஸ் (45) ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை பலமான நிலையில் இட்டனர்.

அவர்களை விட மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (29) அணித் தலைவர் பெட் கமின்ஸ் (21 ஆ.இ.) ஆகியோரும் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்று அணிக்கு வலுசேர்த்தனர்.

டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் 2ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் 6ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் மொஹமத் ஷமி 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: மொஹமத் ஷமி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11