(ஆர்.சேதுராமன்)
சீனாவில் இன்று ஆரம்பமாகும் 19 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றவிருந்த இந்திய வீராங்கனைகள் மூவருக்கு, அனுமதி அட்டையை வழங்க சீனா மறுத்துள்ளது. இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள இந்திய அரசு, தனது விளையாட்டுத்துறை அமைச்சரின் சீன விஜயத்தை இரத்துச் செய்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 'வூசு' தற்காப்புக் கலை வீராங்கனைகள் மூவருக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தமது அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்துகொள்ள முடியவில்லை. இந்த அனுமதி அட்டையே ஆசிய விளையாட்டு விழாவுக்காக சீனாவுக்குச் செல்வதற்கான விசாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள சுமார் அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சீனாவும் உரிமை கோருகிறது. அப்பிராந்தியத்தை 'தென் திபெத்' என சீனா அழைக்கிறது.
இந்நிலையில் மேற்படி வீராங்கனைகளுக்கு ஆசிய விளையாட்டு விழாவுக்கான அனுமதி அட்டை வழங்கப்படாதமை குறித்து இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இந்திய வீரவீராங்கனைகள் சிலருக்கு முன்கூட்டியே இலக்குவைக்கப்பட்ட முறையில் சீனா பாரபட்சம் காட்டுகிறது' என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
சீனாவின் நடவடிக்கைக்கான ஆட்சேபனையாக, ஆசிய விளையாட்டுக்காக சீனா செல்லவிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் அனுராக் தாகூரின் விஜயத்தை சீனா இரத்துச் செய்துள்ளது எனவும் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
இந்திய வூசு குழுவிலுள்ள ஏனைய 10 பேரும் அதிகாரிகளும் ஏற்கெனவே சீனாவுக்கு சென்றுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு முன்னதாக, மேற்படி வீராங்கனைகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தடுக்கப்படவில்லை எனவும் ஆசிய ஒலிம்பிக் குழுவின் சிரேஷ்ட அதிகாரி வெய் ஜிஸோங் கூறியிருந்தார்.
சீன அரசாங்கம் அவர்களுக்கு விசா வழங்கியது. அவர்கள் சீனாவுக்கு வர முடியும், துரதிஷ்டவசமாக அவர்கள் விசாவை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் கூறினார்.
எனினும், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இது தொடர்பாக கூறுகையில், அனைத்து நாடுகளின் வீரவீராங்கனைகளும் சட்டபூர்வ ஆவணங்கடன் ஆசிய விளையாட்டு விழாவுக்கு வரவேற்கப்படுகிறார்கள் என்றார்.
எனினும், அருணாச்சலப்பிரதேசம் என்பதை சீன அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. தென் திபெத் ஆனது, சீனாவின் ஒரு பகுதியாகும்' எனவும் அவர் கூறினார்.
இதற்கு முன்னரும் இத்தகைய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது, அப்பிராந்தியத்துக்கு இந்தியாவின் உரிமை கோரலை அங்கீகரிப்பதாக அமைந்துவிடும் என சீனா கருதுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் மேற்படி 3 வீராங்கனைகளும், சீனாவின் செங்டு நகரில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கு விண்ணப்பித்திருந்தபோது, அவர்களின் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட விசாவுக்குப் பதிலாக. 'ஸ்டெப்லெர் ஊசி' குத்தப்பட்ட விசா வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் அப்போட்டியில் பங்குபற்றவில்லை.
சீனாவில் கூட்டுப்பயிற்சிகளில் பங்குபற்றவிருந்த இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு சீனா விசா வழங்க மறுத்ததால் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM