(நெவில் அன்தனி)
இந்தியாவில் நடைபெறவுள்ள 10 அணிகள் பங்குபற்றும் 13ஆவது ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகும் அணி 129 கோடியே 57 இலட்சத்து 83,941 ரூபா பணப்பரிசை (4,000,000 அமெரிக்க டொலர்கள்) சம்பாதிக்கவுள்ளது.
இரண்டாம் இடத்தைப் பெறும் அணி 64 கோடியே 83 இலட்சத்து 72,680 ரூபா (2,000,000 அமெரிக்க டொலர்கள்) பணப்பரிசைப் பெறவுள்ளது.
இந்தியாவின் 10 மைதானங்களில் அக்டோபர் 5ஆம் திகதிமுதல் நவம்பர் 19ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 48 போட்டிகளைக் கொண்ட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்தில் 324 கோடியே 12 இலட்சத்து 14,309 ரூபா (10 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) மொத்த பணப்பரிசாக வழங்கப்படும்.
அரை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா 25 கோடியே 93 இலட்சத்து 64,738 ரூபா (தலா 800,000 அமெரிக்க டொலர்கள்) கிடைக்கும்.
ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய 10 அணிகள் ஒன்றையொன்று ஒரு தடவை லீக் சுற்றில் எதிர்த்தாடும் வகையில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும்.
லீக் சுற்று நிறைவில் புள்ளிகள் நிலையில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் இரண்டு அரை இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெறும்.
அரை இறுதிகளில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் அஹமதாபத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நவம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள உலக சம்பயினைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
முதல் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கு தலா 3 கோடியே 24 இலட்சத்து 20,251 ரூபா (தலா ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படும்.
லீக் சுற்றில் 45 போட்டிகளில் ஈட்டப்படும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா ஒரு கோடியே 29 இலட்சத்து 68,043 ரூபா (தலா 40,000 அமெரிக்கா டொலர்கள்) பணப்பரிசு கிடைக்கவுள்ளது.
டொலர்களின் பெறுமதிக்கு பணப்பரிசுகள் இலங்கை நாணயப்படி மாறுபட வாய்ப்பு உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM