இன்றைய வானிலை

23 Sep, 2023 | 06:39 AM
image

சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களிலும் அத்துடன்  காலி   மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் வீரகேசரி இணையத்திற்கு கூறினார்.

வானிலை குறித்து அவர் மேலும் எதிர்வுகூறுகையில், 

வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

கிழக்கு மற்றும்  ஊவா மாகாணங்களின்  பல இடங்களிலும் அத்துடன் பொலநறுவை  மாவட்டத்தின்  பல இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.    

புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி, மாத்தறை  ஊடாக  அம்பாந்தோட்டை  வரையான  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம்  மன்னார்  ஊடாக காங்கேசன்துறை  வரையான அத்துடன் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும். 

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஒரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42
news-image

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு...

2023-12-06 19:49:32
news-image

மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக...

2023-12-06 19:52:54
news-image

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : 3...

2023-12-06 19:55:54
news-image

இறந்த நிலையில் மூன்று கடலாமைகள் மீட்பு

2023-12-06 20:22:08
news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51