ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் அனுபவத்தினூடாக செல்லும் மானிடம்

22 Sep, 2023 | 06:33 PM
image

மருத்துவர் சி.யமுனாநந்தா

இன்றைய உலகில் மதிநுட்ப வெடிப்பு, மதிநுட்ப விரிவு, தொழில்நுட்ப ஒன்றிப்பு என்பன பாரிய அனுபவ மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன. தொழில்நுட்ப விருத்தியும் கணினி தொழில்நுட்பமும், மனித சமுதாயத்தில் பிரமிக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கியுள்ளது.

கணினியியல், செயற்கை மதிநுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் என்பன இயந்திர மனிதன் மீநுண் தொழில்நுட்பம் (நனோ தொழில்நுட்பம்) என்பன மதிநுட்ப விரிவினை அடைவதற்கு ஏதுவாக அமைகின்றது. அதாவது மானிடத்தின் விஸ்வரூபத்தினை இவற்றினூடாக தரிசிக்கலாம்.

மீதிறன் மிகுகணினிகள், தகவல் தொடர்பாடல் வலையமைப்பு, மின்னணு மனிதம் (ihuman) வழிப்படுத்தப்பட்ட உயிரியல் கூர்ப்பு என்பன மதிநுட்ப விஸ்வரூபமாக உருவெடுக்கும் இஃது தற்போதைய மதிநுட்பத்தை விட பல மடங்கு பெரிது.

ஆர்முடுகும் ஆர்முடுகலான தொழில்நுட்பங்களாக கணினியியல், பிறப்புரிமையியல், தொழில்நுட்பம், மீநுண் தொழில்நுட்பம் அல்லது நனோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என்பன விளங்குகின்றன. இவை மீமதிநுட்பத்தின் புதிய சகாப்தத்தினை உயிரியலிலும் மின்னணு மனிதத்திலும் ஏற்படுத்தும். 

மானிடத்தின் வெளிப்பாடுகளில் முதன்மையானது தகவல் தொடர்பாடல் ஆகும்.

தகவல் தொடர்பாடலின் அடிப்படை அலகுகள் தொடர்பாடலுக்கான வேலையினதும் நேரத்தினதும் அறிவினதும் பயன்பாட்டினதும் கணியமாக அதாவது பணமாக கருத மின்னணு நாணயங்கள் (Bitcoin) அமையும். 

உலகின் அனைத்துச் செயற்பாடுகளின் அளவு அல்லது அதற்கான பண்டமாற்றாக மீநுட்பநினைவுப் பெறுமதி அமையும். இது இலத்திரனியல் நாணய வடிவம் உறும் வேகமாக மாற்றமடையும் மானிடத்தின் சமூகப் பெறுமானம் தகவல் தொழில்நுட்ப தரவு சேமிப்பு, மீள்பிரயோகம் என்பனவற்றின் ஒன்றிய ஏகப்படும் தன்மையில் (Singularity) தீர்மானிக்கப்படும்.

உலகில் தகவல் திரட்டுகளின் பரிணாமத்தையும் பரிமாணத்தையும் அணுகும்போது இற்றைக்கு 40,000 வருடங்களுக்கு முன் மனிதனால் ஓவியங்கள் தகவல் தொடர்பாடலாக பயன்படுத்தப்பட்டன.

கி.மு. 9000 வருடங்களில் குறியீடுகளும் கி.மு. 3000 வருடங்களுக்கு முன் எழுத்துக்களும் கி.பி.300 வருடங்களில் அச்சுப்பிரதியாக மரக்குற்றியில் வடிவமைக்கப்பட்ட தகவல்களும் அமைந்தன. 

கி.பி 11ம் நூற்றாண்டில் அசையும் அச்சு கண்டறியப்பட்டது.

கி.பி. 15ம் நூற்றாண்டில் அச்சகமும் தகவல் தொடர்பாடலில் மானிடத்தில் செல்வாக்குச் செலுத்தியது. இவையே பின்னாளில் கைத்தொழில் புரட்சி, சோசலியப் புரட்சி, கம்யூனிசம் என்பனவற்றுக்கு அடிப்படையாக அமைந்தன. 

1792இல் தொலைப்பிரதியும் 1876இல் தொலைபேசியும் கண்டறியப்பட்டன. 

19ம் நூற்றாண்டில் வானொலி தொடர்பாலும் 1920இல் அசையும் படத் தொடர்பாடல், தொலைக்காட்சி என்பன மானிடத்தில் செல்வாக்கு செலுத்தின. மிகவும் கடின கட்டமைப்புடைய கணினி மாதிரி 1931இல் உருவாக்கப்பட்டது. 

மின்காந்த புலக் கணினி மாதிரி 1939இலும் மின் சுற்றுக்கணினி 1940இலும் கண்டறியப்பட்டன. 

மேசைக்கணினிகள் 1960இலும் நகர்த்தப்படக்கூடிய கணினி 1971இலும் மடிக்கணினி 1980இலும் உருவாக்கப்பட்டன. 

மிடுக்குமிகு அலைபேசி (Smart phone) 2000ம் ஆண்டில் கண்டறியப்பட்டன.

1969 - 1972ம் ஆண்டுகளில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (நாசா) சந்திரனுக்கு விண்கலத்தையும் மனிதனையும் செலுத்தியபோது பயன்படுத்திய கணினிகளின் நினைவுக்கொள்ளளவு 74KBஆக இருந்தது. ஆனால், தற்போது ஒரு அலைபேசியின் நினைவுக்கொள்ளளவு 32GB அதாவது 1969 நாசா விஞ்ஞானிகள் பயன்படுத்திய கணினி நினைவுக் கொள்ளளவை விட தற்போது சாதாரண பாமரர் கூட 43x10 4 மடங்கு நினைவுக்கொள்ளளவுடன் அலைபேசியினை பயன்படுத்தலாம். 

இது மானிடத்தின் தொழில்நுட்ப விஸ்வரூபத்தின் சிறு பகுதியாகும்.

மனித நாகரிகத்தின் பாதையினை நாம் பின்நோக்கிப் பார்த்தால், ஆரம்பத்தில் மனிதன் பயன்படுத்திய பதார்த்தமாக கல், பின் வெண்கலம் அதன் பின் இரும்பு காணப்படுகிறது.

இவ்வாறே விரிவடைந்து சென்று இன்று பலபார உலோகங்களையும் நுண்மூலங்களையும் பூமியில் மட்டுமல்ல, சந்திரன் உட்பட ஏனைய கோள்களிலும் தேடுகின்றான். அவ்வாறே மானிட நாகரிகத்தில் மனிதன் பயன்படுத்தும் சக்திகளாக ஆரம்பத்தில் நீர்வலுவும் பின் நீராவியின் சக்தியும் பின் மின்சக்தியும் காணப்பட்டன. 

இன்று அணுக்கருப்பிளவு, அணுக்கரு ஒன்றிப்பு என்பன மூலம் சக்திகள் உருவாக்கப்படுகின்றன. தற்போது மானிட நாகரிகத்துடன் தகவல் தொடர்பாடலானது மாற்றமடைந்து வருகிறது. 

இவை தொடர்பாடலும் தகவல் சேகரிப்பும், தகவல்களை கணிப்பிடல் என அமைகின்றன. இதில் அறிவுப்பெருக்கமும் நுண்மதித்திறன் பாய்ச்சலும் அபரிமிதமாக உள்ளன.

தகவல் தொழில்நுட்பமும் தகவல் உருவாக்கமும் வேகமாக அதிகரித்து ஒன்றிய ஏகப்படும் தன்மை (Singularity) காணப்படுகிறது.

வேகமாக அதிகரிக்கும் கணினி கணிப்பீடுகள், துரித தொடர்பாடல் வலையமைப்புக்கள், மின்காந்த அலை தகவல் தொழில்நுட்பம் என்பனவற்றின் மூலம் குறித்த கணத்தில் கணக்கற்ற தொகையில் மக்கள் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. 

தகவல் தொழில்நுட்ப தரவுகளின் அளவு 2010ம் ஆண்டளவில் சீட்டாபைட்டை (Zetta byte) தாண்டிவிட்டது. இது 2025ம் ஆண்டில் 181 ZBsஆக அதிகரிக்கும். இவ்வாறே 2050ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் தரவுக் கொள்ளளவு Yotta byteஐ (10 24 byte) அடையும்.

செயற்கை நுண்மதியில் முதலாவதாக கணினி வலையமைப்பு 1957இல் உருவாக்கப்பட்டது. 1980இல் கணினிகள் மூலம் நிகழ்வுகள் பரிமாறப்பட்டன. 

1996இல் செயற்கை நுண்மதி சதுரங்க நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2014ம் ஆண்டு Google ஆழ்மனம் உருவாக்கப்பட்டது.

நவீன கணினிகள், கணினி கணிப்பீடுகளிலும் தகவல்களை உருவாக்கலில் உதவுகின்றன.

செய்கை மீநுண்மதிநுட்பம் கணினிக் கணிப்பிடல், தகவல் உருவாக்குல் என்பனவற்றுடன் மீநுண் தொழில்நுட்பம் (நனோ தொழில்நுட்பம்) மருத்துவ மூலக்கூற்றுத் தொழில்நுட்பம் என்பனவும் இணைந்து ஒன்றிய ஏகத்துவம் மிக்க (singularity) மானிடம் எமது அண்மைய காலத்தில் உருவாகவுள்ளமை தெள்ளத்தெளிவாகிறது. இவ்வாறு ஒன்றிய ஏகத்துவ மானிடத்தை உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் பயனுள்ள வகையில் அனுபவிப்பதற்காக சிறந்த பண்பாடு, கலாசாரம், வாழ்வியல், மனிதநேயம், மனித உரிமைகள், சூழல் நேயம், நீதி என்பனவற்றினை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப நுண்மதிநுட்ப நினைவுக்கொள்ளளவும் உருவாக்கப்படல் வேண்டும். இதன் மூலம் சமூக விரோத, சமூக அழிப்பு, வன்செயல்கள் என்பனவற்றை இல்லாது ஒழிக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26
news-image

எக்ஸ் தளத்தில் ப்ளாக் செய்யும் வசதி...

2023-08-19 14:49:30
news-image

டுவிட்டரின் லோகோவை 'X' என மாற்றிய...

2023-07-24 16:06:19
news-image

டுவிட்டருக்கு புதிய பெயர், புதிய லோகோ...

2023-07-24 14:34:56
news-image

வட்ஸ்அப்பில் தொலைபேசி எண்ணை சேமிக்காமல் அப்படியே...

2023-07-22 15:16:40
news-image

சந்திரயான் 3 விண்கலத்தில் என்ன இருக்கும்?...

2023-07-14 10:58:25
news-image

செயற்கை நுண்ணறிவு நமது வேலைவாய்ப்பை பறித்து...

2023-07-10 10:37:26