(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
ஈஸ்டர் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பு சபையில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 20 நிமிடங்கள்வரை வெளியில் அறை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அத்துடன் ஐ.எஸ். அமைப்பில் பயிற்சிபெற்றவர்கள் நாட்டுக்குள் இருப்பதாக நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இரண்டாவது நாளாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐ.எஸ். அமைப்பில் பயிற்சிபெற்றவர்கள் நாட்டுக்குள் இருப்பதாக நான் தெரிவித்ததாக இந்த சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். அவ்வாறானதொரு விடயத்தை நான் தெரிவிக்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் ஈஸ்டர் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பு சபையில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 20 நிமிடங்கள்வரை வெளியில் அறை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்போது நானும் அவருடன் சென்றிருந்தேன். பிரதமர் அங்கு வந்திருப்பதை அறிந்த பாதுகாப்பு தரப்பின் சிலர் அங்கு வந்து, சிறிது நேரம் இருக்குமாறு தெரிவித்திருந்தனர். அப்போது பாதுகாப்பு சபை கூட்டத்தில் முப்படைகளின் தளபதி, பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பல அதிகாரிகள் இருந்தனர். ஆனால் அரசியல்வாதிகள் யாரும் இருக்கவில்லை.
பின்னர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் காரியாலயத்துக்கு அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடி எஞ்சிய குண்டுதாரிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தபோது குண்டுதாரிகள் அனைவரும் குண்டை வெடிக்கவைத்துக்கொண்டனர்.
அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பல விடயங்களை தெரிவித்திருந்தார். இந்த விடயங்களை அவர் விரும்பினால் மேல் நீதிமன்ற மூன்றுபேர் கொண்டு விசாரணைக்குழுவுக்கு வழங்க முடியும். அவ்வாறு வழங்கினால் அந்த விடயங்கள் விசாரணைக்கு முக்கியமாக இருக்கும்.
அத்துடன் புலனாய்வு பிரிவு தொடர்பாக அரசியல்வாதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒருசில அரசியல்வாதிகளின் பேச்சுக்களை பார்க்கும் பயங்கரவாதிகளும் உலகத்தாரும் சிரிக்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற விவாதத்தை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. ஏனெனில் நாங்கள் இதுதொடர்பாக விவாதித்து பிளவுபட்டுக்கொள்வதன் அழிவடையப்போவது இந்த தேசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM