(நா.தனுஜா)
இலங்கை 12 மாதங்கள் எனும் மிகக்குறுகிய காலத்தில் பணவீக்கத்தை 65 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பதில் வெற்றியீட்டியிருப்பதாகவும், பொருளாதார ரீதியில் முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் வியட்நாம் மத்திய வங்கி ஆளுநர் குயேன் தி ஹொங் தெரிவித்துள்ளார்.
வியட்நாமுக்கான இலங்கைத்தூதுவர் பேராசிரியர் ஏ.சாஜ் யு.மென்டிஸ் மற்றும் வியட்நாம் அரச வங்கி என்று அறியப்படும் அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் குயேன் தி ஹொங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு சில தினங்களுக்கு முன்னர் வியட்நாம் அரச வங்கி கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது கடந்த 12 மாதகாலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வியட்நாம் அரச வங்கி ஆளுநர் நேர்மறையானதும், ஊக்குவிக்கத்தக்கதுமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தினார்.
இங்கு இருதரப்பினரும் நுண்பாக மற்றும் பெரும்பாகப் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கொள்கைகள் குறித்தும், கடந்த சில தசாப்தங்களாக வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள வியட்நாமில் நடைமுறைப்படுத்தப்படும் நாணய மற்றும் நிதிக்கொள்கை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடினர்.
வியட்நாம் அரச வங்கி ஆளுநர் குயேன் தி ஹொங், உலகளாவிய ரீதியில் செயற்திறன்மிக்கதும் திறமையானதுமான மத்திய வங்கி ஆளுநர்களாக மிகுந்த நன்மதிப்பைப்பெற்ற 'குளோபல் பைனான்ஸியல் மெகஸீனால்' தெரிவுசெய்யப்பட்ட 3 ஆளுநர்களில் ஒருவராவார். அவரது இந்த சாதனைக்கு இலங்கைத்தூதுவர் மென்டிஸ் வாழ்த்துத்தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ஆளுநர் ஹொங், 'குளோபல் பைனான்ஸியல் மெகஸீனால்' உலகளாவிய ரீதியில் சிறந்த ஆளுநர்களில் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு தனது வாழ்த்தினைப் பகிர்ந்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட ஆளுநர் ஹொங், 12 மாதங்கள் எனும் மிகக்குறுகிய காலத்துக்குள் பணவீக்கத்தை 65 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பதில் இலங்கை வெற்றிகண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி வட்டிவீதங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டுக்கையிருப்பில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்திரநிலைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவருக்குப் பதிலளித்த இலங்கைத்தூதுவர் மென்டிஸ், இன்றளவிலே உலகளாவிய ரீதியில் மிகவேகமாக வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரத்தைக்கொண்ட நாடுகளில் ஒன்றாக வியட்நாம் மாறியிருப்பதாகவும், அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் எந்தவொரு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சியில் மத்திய வங்கி மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார். அதுமாத்திரமன்றி பணவீக்கம், வட்டிவீதம், வேலைவாய்ப்பின்மை போன்ற முக்கிய பொருளாதாரக்குறிகாட்டிகளில் வியட்நாம் நேர்மறையான வீதத்தைப் பேணிவரும் அதேவேளை, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் கொண்டிருப்பதாக தூதுவர் மென்டிஸ் பாராட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM