ஜி20 உச்சிமாநாட்டின் போது கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பினார் என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீக்கிய செயற்பாட்டாளர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறித்தே பைடன் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச புலனாய்வு தகவல் பரிமாறும் அமைப்பான ஐந்து கண்கள் பல நாடுகள் நேரடியாக இந்திய பிரதமரிடம் கேள்விஎழுப்பியுள்ளன என ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட மூவரை மேற்கோள்காட்டி பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சகாக்கள் இது குறித்து மோடியிடம் நேரடியாக பேசவேண்டும் என கனடா வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்தே பல நாடுகள் இது குறித்த தங்கள் கரிசனைகளை மோடியிடம் நேரடியாக வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பினான்சியல் டைம்சின் கேள்விக்கு வெள்ளை மாளிகை பதிலளிக்கவில்லை-எனினும் இந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM