(ஆர்.சேதுராமன்)
ஸ்பானிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அன்ட்ரூ கேம்ஸ், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என அச்சம்மேளனம் வெள்ளிக்கிழமை (22) தெரிவித்துள்ளது.
ஸ்பானிய அணி வீராங்கனை ஒருவரை அச்சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் முத்தமிட்ட விவகாரத்தின் பின்னணியில் அன்ட்ரூ கேம்ஸ் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில்; இங்கிலாந்தை ஸ்பெய்ன் வென்றது. அதன் பின்னர், ஸ்பானிய வீராங்கனையான ஜெனி ஹேர்மோசோவை சம்மேளனத்தின் அப்போதைய தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் உதட்டில் முத்தமிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ரூபியாலெஸ் பதவி விலகும்வரை தாம் போட்டிகளில் பங்குபற்றப் போவதில்லை என ஸ்பானிய தேசிய கால்பந்தாட்ட வீராங்கனைகள் தெரிவித்தனர்.
ரூபியாலெஸுக்கு எதிராக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் விசாரணையை ஆரம்பித்த நிலையில், அவர் பதவியை இராஜினாமா செய்தார்.
எனினும், ஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தில் மேலும் மாற்றங்கள் செய்யும்வரை தமது பகி;ஷ்கரிப்பு தொடரும் என வீராங்கனைகள் அறிவித்தனர். அவர்கள் பயிற்சிகளில் ஈடுபடவும் மறுத்தனர்.
ஸ்பானிய மகளிர் அணி இன்று சுவீடனுடன் மோதவுள்ள நிலையில், வீராங்கனைளுக்கும் ஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளன அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது.
இப்பேச்சுவார்த்தைகளின்போது, ஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தில் உடனடியாக மாற்றங்கள் செய்யப்படும் சம்மேளனம் உறுதியளித்தது.
அதன்பின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கேம்ஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் தலைவர் ரூபியாலெஸுக்கு வலதுகரமாக விளங்கியவர்.
வீராங்கனைகளுடனான இணக்கப்பாட்டின்படி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என ஸ்பானிய அரசாங்கத்தின் தேசிய விளையாட்டு முகவரகத் தலைவர் விக்டர் பிரான்கோஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலகக் கிண்ணப் போட்டிகளின்போது நடந்தவற்றுக்காக வீராங்கனைகளிடம் தான் மன்னிப்பு கோருவதாக ஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 'சம்மேளனத்தை தமது பாதுகாப்பான இல்லமாக வீராங்கனைகள் உணர்வது அவசியம் என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம்' என அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மேலும் 6 முதல் 9 சிரேஷ்ட அதிகாரிகளை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளனர் எனவும் அல்லது அவர்கள் விலக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஸ்பானிய அணி வீராங்கனைகள் மீண்டும் பயிற்சிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ஸ்பானிய அணி நேஷன்ஸ் லீக் சுற்றுப்போட்டியில் இன்று வெள்ளிக்கிழமை சுவீடனை எதிர்கொள்ளவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்;கிழமை சுவிட்ஸர்லாந்தை ஸ்பெய்ன் எதிர்கொள்ளவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM