இயக்குநர் பேரரசு வெளியிட்ட 'ஐமா' திரைப்பட முன்னோட்டம்

22 Sep, 2023 | 04:15 PM
image

அறிமுக நடிகர் யூனஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஐமா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே ராஜன் மற்றும் இயக்குநர் பேரரசு ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ஐமா'. இப்படத்தில் யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி வீரா, மேகா மாலு மனோகரன், படத்தின் தயாரிப்பாளரான சண்முகம் ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஷ்ணு கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. ஆர். ராகுல் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தமிழ் எக்ஸாட்டிக் ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான சண்முகம் ராமசாமி தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 

''ஐமா என்றால் கடவுளின் வலிமை என பொருள். இந்த திரைப்படத்தில் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்பதனை எதிர் நிலை கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் மருத்துவ துறையில் நடைபெறும் குற்ற சம்பவம் ஒன்றையும் இடம்பெற வைத்திருக்கிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right