பான் இந்திய படத்தில் நடிக்கும் செல்வராகவன்

22 Sep, 2023 | 04:03 PM
image

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பெயரிடப்படாத பான் இந்திய திரைப்படம் ஒன்றில் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ரங்கநாதன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு, ராதா ரவி, வினோதினி, சரஸ்வதி மேனன், ஷைன் டாம் சாக்கோ, ஜே. டி. சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

பான் இந்திய படைப்பாக உருவாகும் இந்த திரைப்படத்தை மொமென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. ஏ. ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரி கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழகத்தின் மாநகரங்களில் ஒன்றான திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right