விக்ரம் பிரபு நடிக்கும் 'இறுகப்பற்று' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

22 Sep, 2023 | 04:03 PM
image

நடிகர் விக்ரம் பிரபு கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'இறுகப்பற்று' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'பட்டாபட்டி', 'எலி', 'தெனாலிராமன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'இறுகப்பற்று'.

இதில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ , ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட படர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

உறவுகளை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ். ஆர். பிரபு, பி. கோபிநாத், ஆர். தங்க பிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ ஆகிய மூன்று நடிகர்களின் உறவுகள் குறித்த காட்சிகள் விவரிக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right