அவளுடன் நானும் இறந்துவிட்டேன் : மகள் குறித்து விஜய் ஆண்டனி உருக்கம்

Published By: Digital Desk 3

22 Sep, 2023 | 01:46 PM
image

இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான விஜய் ஆண்டனி மகள் இறந்த பிறகு முதல் முறையாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் மகள் மீரா செப்டெம்பர் 19 ஆம் திகதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 16 வயதே ஆன மீரா எடுத்த முடிவு விஜய் ஆண்டனியை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. விஜய் ஆண்டனி மகளின் இறுதிச் சடங்கை முடித்த பிறகு எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் விஜய் ஆண்டனி தெரிவித்திருப்பதாவது, 

அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். உங்கள் விஜய் ஆண்டனி என தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right