எம்மில் சிலர் நாளாந்தம் தங்களுக்கு தெரிந்த தொழிலில் கடினமாக உழைத்து ஓரளவிற்கு வருவாயை ஈட்டி வருவர். அது தங்களுக்கு போதாது என்றாலும் அந்த சிறிய வருவாயைக் கொண்டு நிலைமையை சமாளித்து வருவர். இந்நிலையில் திடீரென்று அந்த குறைவான வருவாயிலும் தடை ஏற்பட்டால்... செய்வதறியாது திகைத்து நின்று விடுவோம்.
அதேபோல் ஓரளவு நுகர்வோர் சந்தையில் நாளாந்தம் லட்சக் கணக்கில் பணப்புழக்கம் கொண்டிருந்த தொழிலதிபர்களுக்கு திடீரென்று வருவாய் வருவதில் தடை ஏற்பட்டால்... அவர்கள் பாரிய மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவர்.
அதன் பிறகு 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலைக்கு சென்று விடுவர். மீண்டும் பணப்புழக்கம் இயல்பாக வரவேண்டும் என்ற ஒற்றை சிந்தனை கொண்டவராகவும் இருப்பர்.
இவ்விருவர்களும் பின்வரும் எளிய பரிகாரத்தை பின்பற்றினால்... பண வருவாயில் திடீரென்று ஏற்பட்ட தடை அகன்று, மீண்டும் பணப்புழக்கம் இயல்பாகும்.
இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் காப்பர் கோப்பை அதாவது செம்பினாலான கோப்பை மற்றும் வர மிளகாய் விதைகள்.
தினமும் காலையில் 6:00 மணி முதல் ஒன்பது மணிக்குள் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஆறு மணி முதல் ஒன்பது மணிக்குள் நீங்கள் தெரிவு செய்யும் நேரத்தை இந்த பரிகாரத்திற்கான மொத்த நாட்களுக்குள் ஒரு போதும் மாற்றி அமைக்க கூடாது. அதாவது இந்த பரிகாரத்தை செய்ய நீங்கள் காலையில் ஆறு அல்லது ஆறரை மணியைத் தெரிவு செய்தால்... தொடர்ந்து அனைத்து தினங்களிலும் அதே ஆறு அல்லது ஆறரை மணியில் தான் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 45 நாட்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த பரிகாரத்தை காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து சூரிய பகவானை- சூரிய பகவான் உதிக்கும் கிழக்கு திசையில் நோக்கி உங்களது கைகளில் காப்பர் கோப்பையினை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த காப்பர் கோப்பைக்குள் எட்டு என்ற எண்ணிக்கையிலான வர மிளகாய் விதைகளை.. நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள் வர மிளகாய் விதைகளை மட்டும் இட வேண்டும். அதன் பிறகு அதனை கையில் வைத்துக்கொண்டு .... எல்லாம் வல்ல சூர்யா பகவானிடம் 'ஓம் சூர்யாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே.. 'எம்முடைய பண வருவாய் தடையை பற்றி தன வரவை உண்டாக்கு' என மனம் உருக பிரார்த்திக்க வேண்டும்.
45 நாட்களிலும் தொடர்ந்து ஒரே சமயத்தில் நீங்கள் மேற்கொள்ளும் இந்த பிரத்யேக பரிகாரத்திற்குரிய பலன்கள் கிடைப்பதை உங்களுடைய அனுபவத்தில் காணலாம்.
அதன் பிறகு பண வருவாயில் ஏற்பட்ட திடீர் தடை அகன்று பணம் பழைய நிலையை விட கூடுதலாகவே வர தொடங்கும். உங்கள் மகிழ்ச்சியும் பொங்கும். பெருகும்.
'ஓம் சூர்யாய நமஹ' என்றும் சொல்லலாம். 'ஓம் சூரிய பகவானே போற்றி' என்றும் சொல்லலாம். 'ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமே சதா' என்றும் சொல்லலாம்.
தகவல் : பாக்கியா
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM