கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

22 Sep, 2023 | 01:05 PM
image

திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே குழந்தை பேறு என்பது இயற்கையாக நிகழாமல் மருத்துவத்தின் உதவியுடன் நடைபெறுவது என்பது அதிகரித்து வருகிறது.

இதனை தவிர்க்க இயலும் என்றாலும், இன்றைய இளம் தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதால்... இதனை எதிர்கொள்வது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.

இந்நிலையில் எம்முடைய பெண்மணிகளில் சிலருக்கு திருமணத்திற்கு பிறகு கருச்சிதைவு என்பது ஏற்படுகிறது.‌ சிலருக்கு ஒரு முறையும்.. சிலருக்கு பலமுறையும்.. கருச்சிதைவு ஏற்பட்டிருக்கக்கூடும். இதற்கான காரணத்தை மருத்துவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்.

மரபணு கோளாறுகளால் கருச்சிதைவு இயற்கையான முறையில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது ஒரு செயலற்ற அல்லது மறைவான அசாதாரண மரபணு கோளாறுகளைக் கொண்ட பெற்றோர்கள்.. அந்த மரபணுவை தம்முடைய வாரிசுக்கும் கடத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அத்தகைய மரபணு கோளாறுகள்  உள்ள பெற்றோர்கள் கருத்தரிக்கும் போது.. அவை இயற்கையாகவே கருச்சிதைவை ஏற்படுத்துகிறது.

சில தருணங்களில் தாயின் வயிற்றில் உருவாகும் கருவை.. அப்பெண்ணின் நோய் எதிர்ப்பு மண்டலமானது எதிரியாக கருதி தாக்கி, கருச்சிதைவை ஏற்படுத்துகிறது.‌

வேறு சில பெண்களுக்கு த்ரோம்போலியா என்ற ரத்த உறைவு பாதிப்பிற்கு ஆளாகும் போது.. அதில் உண்டாகும் கட்டிகள் நஞ்சு கொடியை பாதிக்கிறது. இதன் விளைவாக கருவிற்கு செல்லக்கூடிய பிராண வாயுவின் அளவு குறைந்து கருச்சிதைவை ஏற்படுகிறது.

தைராய்டு சுரப்பியின் சமசீரற்ற தன்மையின் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படக்கூடும்.பி சி ஓ எஸ் எனப்படும் சினைப்பை கட்டிகள் மற்றும் சில ஹோர்மோன் சுரப்பியின் கோளாறுகள் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படக்கூடும்.

கருப்பையில் உருவாகும் கருவானது தரக்குறைவுடன் இருந்தாலும்.. அது முழுமையான கருவாக வளர முடியாத சூழலில் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.

திருமணத்திற்கு முன்பு பெண்கள் மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகியிருந்தால்... அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதனால் அவர்களின் வயிற்றில் வளரும் கரு போதிய ஊட்ட சத்தின்மை காரணமாக கருச்சிதைவு நிகழும்.

சில பெண்களுக்கு கருப்பை, கருப்பைச் சுவர் போன்ற அமைப்புகளில் ஏற்படும் மற்றும் செயல் திறனில் உள்ள குறைகளின் காரணமாகவும் கருப்பதிவில் தரம் குறைந்து, சிசுவிற்கு பரிமாற்றம் நிகழும் ஊட்டச்சத்தின் அளவானது குறைந்து, கருச்சிதைவு ஏற்படக்கூடும்.

எனவே கருச்சிதைவு தன்னிச்சையாக நிகழ்ந்தால் இது தொடர்பாக மருத்துவரிடம் எத்தகைய காரணத்தினால் கருச்சிதைவு நிகழ்ந்தது என்பதனை முழுமையாக கேட்டு அறிந்து கொண்டு, அதற்கு மாற்று உபாயத்தையும் மருத்துவரிடமே கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உறுதியாக  பின்பற்றினால்.. கருச்சிதைவு நிகழாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right