கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய முகவர்கள் உள்ளனர் என்பதற்கான நம்பதகுந்த ஆதாரங்கள் உள்ளன என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்த அவர் மீண்டும் வியாழக்கிழமை நியுயோர்க்கில் செய்தியாளர்களிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
நான் திங்கட்கிழமை தெரிவித்தது போல கனடா பிரஜையொருவர் கனடாவில் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய முகவர்கள் உள்ளனர் என்பதற்கான நம்பதகுந்த ஆதாரங்கள் உள்ளன என குறிப்பிட்;டுள்ள அவர் கனடா தான் நம்புகின்ற ஒழுங்குமுறையை அடிப்படையாக கொண்ட உலக ஒழுங்கிற்கு ஆதரவளிக்pன்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆதாரங்கள் எவ்வளவு தூ}ரம் வலுவானவை என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ அதற்கு நேரடியானபதிலலை வழங்காவிட்டாலும் கனடாவில் சுதந்திரமான இறுக்கமான நீதித்துறை உள்ளது என தெரிவித்துள்ளார்.
அந்த நீதிசெயற்பாடுகள் முழுமையான நேர்மையுடன் இடம்பெறுவதற்கு நாங்கள் அனுமதிக்கின்றோம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் இதனை நிராகரித்துள்ளாரா அல்லது ஏற்றுக்கொண்டுள்ளாரா என்ற கேள்விக்குஅவருடன் நான் வெளிப்படையான நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் நான் உறுதியாக எனது கரிசனைகளை வெளியிட்டேன் எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM