(ஆர்.சேதுராமன்)
எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான தென் ஆபிரிக்க குழாமிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசாண்டா மகாலா ஆகியோர் விலகியுள்ளனர். இவ்விருவரும் காயங்களால் பாதிக்கப்பட்டுள்மையே இதற்குக் காரணம்.
ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
மேற்படி இரு வீரர்களும் தென் ஆபிரிக்காவின் ஆரம்பக் குழாமில் இடம்பெற்றிருந்தனர்.
தென் ஆபிரிக்க அணியினர் சனிக்கிழமை (23) இந்தியாவுக்குப் பயணிக்கவுள்ளனர். எனினும், இவ்விரு வீரர்களும் குணமடையவில்லை.
இந்நிலையில், அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசாண்டா மகாலா ஆகியோர் இப்போட்டிகளில் பங்குபற்ற மாட்டார்கள் என தென் ஆபிரிக்க அணியின் தலைமைப் பயிற்றுநர் ரொப் வோல்ட்டர் நேற்று தெரிவித்துள்ளார்.
இது தென் ஆபிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
தென் ஆபிரிக்க அணி ஒக்டோபர் 7 ஆம் திகதி தனது முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ளவுமை குறிப்பிடத்க்கது.
தென் ஆபிரிக்க அணியின் பயிற்றுநர் ரொப் வோல்ட்டர் இது தொடர்பாக கூறுகையில், உலகக் கிண்ணப் போட்டிகளில் அன்ரிச், மகாலா இருவரும் விளையாட மாட்டார்கள் என்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது. இவ்விருவரும் தென் ஆபிரிக்க அணிக்கு மிக்ப பெறுமதியான வீரர்கள் எனக் கூறினார்.
'இவ்விருவரும் அணியில் இடம்பெறாதமை குறித்து அனுதாபம் கொண்டுள்ளோம். ஆவர்கள் மீண்டும் போட்டிகளுக்குத் திரும்புவதற்குத் தேவையான உதவிகளை நாம் வழங்குவோம்' எனவும் வோல்ட்டர் கூறினார்.
அன்ட்ரிச், மகாலா ஆகியோருக்கு பதிலாக சகலதுறை வீரர் அண்டில் பெலுக்வாயோ மற்றும் வேகப்பந்துவீச்சாளர் லிஸாட் வில்லியம்ஸ் ஆகியோர், தென் ஆபிரிக்க குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM