இன்றைய வானிலை

22 Sep, 2023 | 07:11 AM
image

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன்  காலி   மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 

கிழக்கு, ஊவா,மத்திய மற்றும் வடமத்திய  மாகாணங்களின்  பல இடங்களிலும் அத்துடன் வவுனியா  மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.    

புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி, மாத்தறை  ஊடாக  அம்பாந்தோட்டை  வரையான  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம்  மன்னார்  ஊடாக காங்கேசன்துறை  வரையான அத்துடன் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை...

2024-10-13 11:03:13
news-image

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு...

2024-10-13 11:23:53
news-image

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் -...

2024-10-13 11:04:44
news-image

அநுர - ரணில் இடையே வித்தியாசமில்லை...

2024-10-13 10:30:26
news-image

196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி...

2024-10-13 10:13:12
news-image

வடமராட்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு...

2024-10-13 10:50:56
news-image

ரயிலில் மோதி 3 வயது குழந்தை...

2024-10-13 10:21:31