(எம்.மனோசித்ரா)
அரசாங்கம் அதன் பலவீனங்களை மறைப்பதற்காக சமூக வலைத்தள ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு , பிரதான ஊடகங்களையும் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது. அவ்வாறு ஊடகங்களை முடக்குவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அரசாங்கம் பலவீனமடைவதால் , அதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை தடுப்பதற்காக சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் பலவீனங்கள், ஊழல், மோசடிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே வெளிக் கொண்டு வரப்பட்டன.
சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக பிரதான ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் மூலம் எவராலும் சுதந்திரமாகக் கருத்து தெரிவிக்க முடியாது. அவ்வாறெனில் செய்திகளை எவ்வாறு வெளிக் கொண்டு வருவது? மக்களுக்கு எவ்வாறு உண்மைகளை தெரியப்படுத்துவது?
மக்களுக்கு உள்ள உரிமைகளை கட்டுப்படுத்துவற்கு அரசாங்கத்துக்கு எவ்வித உரிமையும் கிடையாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில் துளியளவும் நம்பிக்கை இல்லை என சகலரும் தெரிவித்துள்ளனர். எனவே இதன் பிரதான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சர்வதேச விசாரணைகள் அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM