70% க்கும் அதிகமான அரச நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் நிகழ்நிலையில் வெளியிடப்பட வேண்டிய தகவல்களில் 40% க்கும் குறைவான தகவல்களையே வெளியிட்டுள்ளனர் என்று வெரிட்டே ரிசர்ச்சின் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கமத்தொழில் மற்றும் பொது நிர்வாக அமைச்சு வெளிப்படுத்த வேண்டிய தகவல்களின் அரைவாசிக்கு மேற்பட்ட தகவல்களை வெளியிட்டு மதிப்பீட்டில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியன தேவையான தகவல்களில் 20% க்கும் குறைவாகவே வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், சட்டத்திற்க்கு மிகக்குறைந்த இணக்கத்தை வெளிப்படுத்தியிருப்பதையும் கண்டறியப்பட்டது. மேலும் ஒட்டுமொத்தமாக குறைந்த மதிப்பெண்களை தொழில்நுட்ப அமைச்சு பெற்றுள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களிலும் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய வகையிலான மிக உயர்ந்த மொழி சார்பு நிலைகள் இருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. ஜனாதிபதி அலுவலகம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரண்டு நிறுவனங்கள் மாத்திரமே நிகழ்நிலையில் மும்மொழிகளிலும் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டுவந்துள்ளது. நிகழ்நிலையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் கிட்டத்தட்ட அரைவாசி தகவல்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்தபோதிலும், வெறும் 37% தகவல் சிங்களத்திலும், 29% தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
"இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்துதல் (proactive disclosure): அரச நிறுவனங்களின் தரவரிசைப்படுத்துதல்" சமீபத்தில் வெரிட்டே ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் இக் கண்டுபிடிப்புகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய வெரிட்டே ரிசர்ச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. நிஷான் டி மெல் அவர்கள் ஜனநாயகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து பேசினார்.
“மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிமுறைகள், தகவல்கள் முன்கூட்டியே பகிர வேண்டும் என்றும், நிகழ்நிலையில் (ஆன்லைன்) பகிரப்பட வேண்டிய தகவல் வகைகளைக் குறிப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.” என கூறினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளின் கீழ், அமைச்சர்கள் மற்றும் பொது அதிகாரிகள் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிடுதல், தற்போதைய திட்டங்களைப் பற்றி பொதுமக்களுக்கு தெரிவித்தல் மற்றும் நிகழ்நிலையில் (ஆன்லைனில்) தங்கள் செயல்பாடுகள், வரவு செலவு திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றிய புதுப்பித்த தகவல்களை தெரிவிப்பதை வழக்கமாகிக்கொள்ள வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 29 அமைச்சுக்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியன நிகழ்நிலையினூடாக (ஆன்லைனூடாக) முன்கூட்டிய தகவல் வெளிப்படுத்துதலின் (proactive disclosure) தேவைகளுக்கு இணங்குகின்றனவா என்பதை வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வு மதிப்பிட்டது. இக்கண்காணிப்பு கட்டமைப்பானது, (அ) தகவல் முன்கூட்டியே வெளிப்படுத்தப்பட்டதா, மற்றும் (ஆ) வெளிப்படுத்தப்பட்ட தகவலின் பயன்பாடு ஆகிய இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது.
வெரிட்டே ரிசர்ச், மதிப்பீட்டின் மதிப்பெண்களைப் பயன்படுத்தி, இலங்கை அரசின் திறந்தநிலை சுட்டெண்ணைக் கணக்கிட்டது. அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை கடந்த ஆறு ஆண்டுகளில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, 2017 இல் 25% இல் இருந்து 2022 இல் 33% ஆக அது உயர்ந்துள்ளது. இருப்பினும், இது இன்னும் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலே நீடிக்கிறது.
அறிக்கைக்கான இணைப்பு: https://www.veriteresearch.org/wp-content/uploads/2023/09/20230904_ProactiveDisclosureReport_F_AM-1.pdf
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM