இங்­கி­லாந்து ஏ அணி தற்­போது இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்­ளது. இந்த அணி­யுடன் இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­ட­வுள்­ளது.

இந்தப் போட்டித் தொடர் எதிர்­வரும் 17ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை ஏ அணி இன்னும் தெரி­­வு­செய்­யப்­ப­ட­வில்லை. இலங்கை அணித் தலைவர் யார் என்­பது கூட இன்னும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் கடந்த புதன்­கி­ழமை இங்­கி­லாந்து ஏ அணியும் இலங்கை ஏ அணியும் மோதும் கிரிக்கெட் தொடர் குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நடை­பெற்­றது.

இதில் இங்­கி­லாந்து ஏ அணித் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்­சி­யாளர் அண்டி பிளவர் ஆகியோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். ஆனால் இலங்கை அணி சார்­பாக பயிற்­சி­யாளர் அவிஷ்க குண­வர்­தன மட்­டுமே ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்தார்.

அப்­போது இலங்கை அணி ஏன் இன்னும் தெரி­வு­செய்­யப்­ப­ட­வில்லை? இது முறை­யல்­லவே. ஒரு ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இரண்டு அணித் தலை­வர்­களும் கலந்­து­கொள்­வ­து­தானே வழக்கம் என்று கேட்­ட­தற்கு பதி­ல­ளித்த இலங்கை ஏ அணியின் பயிற்­சி­யாளர் அவிஷ்க குண­வர்­தன, உண்­மைதான் இரண்டு அணி வீரர்­களும் கலந்­து­கொள்­ள­வேண்டும். ஆனால் எமக்­கி­ருக்கும் பிரச்­சினை வேறு. நாம் இரு­பது வீரர்கள் கொண்ட அணி­யுடன் பயிற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தோம். அதில் அனைத்து வீரர்­களும் திற­மை­யா­ன­வர்­கள்தான். 

அதனால் யாரை இணைத்துக் கொள்­வது யாரை தவிர்ப்­பது என்­பதில் எம்­மி­டமே குழப்­பங்கள் நீடிக்கின்றன. அது­மட்­டு­மன்றி அந்த இரு­பது வீரர்­களில் மூவர் மாற்­றீ­டாக தென்­னா­பி­ரிக்­காவில் இலங்கை தேசிய அணியில் இணைந்­துள்­ளனர்.

இதன் கார­ண­மா­கவே நாம் இலங்கை அணியைத் தெரிவு செய்ய கால தாமதமாகின்றது என்றார். இலங்கை ஏ அணியில் சந்திமால் விளையாடுவாரா என்று கேட்டதற்கு அதை தெரிவுக்குழுதான் முடிவுசெய்ய வேண்டும் என்றார்.