132 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு

Published By: Digital Desk 3

21 Sep, 2023 | 04:57 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

இலங்கை கடற்படையினரால் நீர்கொழும்பு பகுதியில் வியாழக்கிழமை (21) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 132 மில்லியன்  ரூபாவுக்கும் அதிகபெறுமதியான  400 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் நாட்டை சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு கடற்படை கட்டளைப்பிரிவு நீர்கொழும்பு மாங்குளி களப்பு பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையில்  சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனை செய்த போது 10 பொலித்தீன் உறைகளில் பொதிசெய்யப்பட்ட நிலையில்  400 கிலோ 810 கிராம் கேரள கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் கேரளா கஞ்சாவின் மொத்த பெறுமதி 132 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கலால் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28
news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42
news-image

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 03:16:05
news-image

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக்...

2025-03-24 03:09:11
news-image

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது...

2025-03-24 03:04:35
news-image

ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து சபைகளை நிறுவுவோம்...

2025-03-24 03:02:35
news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48